இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது.
பணபலம், ஆள்பலம், வன்முறை, வதந்தி ஆகிய சவால்கள் இந்த தேர்தலில் உள்ளன.
10.75 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்தையும் கண்காணிக்க தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பாடுவார்.
85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்.
தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு
40% அதிகமான மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யபடும்.
1கோடியே 82 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் சாதி மத அடையாளங்களை கூறி வாக்கு சேகரிக்க தட்சி விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்