மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

நர்மதை
SHARE

மழை கெடுத்த திட்டம்

இன்று மீண்டும் கெஸ்லா ப்ளாக் பகுதிக்கு செல்ல வேண்டும். ஆனால், நேற்றிரவு அடித்த மழையில் ஆற்றுப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட, அந்தத் திட்டம் வேறுவழியின்றி கைவிடப்பட்டது. அதனால், நேற்றிரவு பேசியபடி இன்று நர்மதை ஆற்றுக்கு செல்வதாக முடிவெடுத்தேன்.

இரவு எழுதிவிட்டு உறங்க நேரம் எடுத்ததால், கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டேன். விழித்த போது மணி 6.40. வெளியே பேய் மழை. நர்மதை ஆற்றை பார்க்க சீக்கிரமே கிளம்பியிருக்க வேண்டும். எழுந்து அவசர அவசரமாக கிளம்பினேன். வெளியேறும் போது நேரம். 8.30. 

ரயிலில் பயணிக்க முடிவு செய்தேன். 8.48 க்கு இட்டார்ஸி ரயில் நிலையத்திலிருந்து ஓஷங்காபாத் வழியே டர்க் (durg) செல்லும் அமர்க்கண்டக் எக்ஸ்பிரஸில் ஏறினேன்.. 

சாலையை விட ரயிலுக்குள் நல்ல வெள்ளம். பான், ரயில் கழிவறை, எரிபொருள் என எல்லாமும் சேர்ந்து ஏதோ செய்ய, என்னை அறியாமல் வாந்தி வந்தது.. 

முன்பெல்லாம் யாராவது, ரொம்ப நாத்தமடிக்குது. வாந்தி வருகிறது என்று சொன்னால், ரொம்ப நடிக்கிறார்கள் என்று நினைப்பேன்.. ஆனால், வரும்போல… (நானெல்லாம் சாக்கடைக்குள்ளாக ஒரு மாமாங்கம் கூடு கட்டி வாழ்ந்த வித்தைக்காரன் மொமெண்ட் ) 

வாயை கொப்பளித்து விட்டு, கொஞ்சம் தண்ணீர் குடித்து துப்பினேன். பிறகு வந்து அமர்ந்தேன். ரயில்வே போலீசில் உள்ள எல்லா முதல்நிலை காவலர்களும் இந்த ரயிலுக்குள் இருப்பது போல தோன்றியது. அவ்வளவு காவலர்கள். கவசங்கள், லத்திகள் மொத்த மொத்தமாய் குவிக்கப்பட்டிருந்தன… எங்கே யாரை ஒடுக்கவோ? 

யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை என்பது அடுத்த சோகம். இந்த ரயில் கட்டாயமாக, ஓஷங்காபாத் போகும் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் இவர்களிடம் இந்தியில் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். 

நான் திணறுவதை பார்த்த ஒருவர், கஹா சே தும் என்றார்.. சட்டென்று தமிழ்நாடு சே என்றேன். 

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

ஹிந்தி கோ மாலும் ஹே??

தோட தோடா… 

அவர்களுக்குள் ஏதோ பேசி.. சிரித்தார்கள் ..

யஹா கியா கர் ரஹா ஹே…

யஹா வும் கியாவும் புரிந்த்து. மே ஏ டிரிப் கேளியே ஆத்தா…

கிஸ்கே சாத்

”நை சம்ஜே” என்று அசடு வழிந்தேன். 

கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் கேட்டேன்… கிஸ்கே என்றால் ஹும் என்று சொன்னது.. 

நான் தனியாக வந்துள்ளேன் என்பதை இந்தியில் சொல்லவும் அறிந்துகொண்டேன். ஆனால் சொல்லவில்லை. என்னவோ அவர்களிடம் பேசுவதை தவிர்க்கவேண்டும் என்று நினைத்தேன்.  எழுந்து வாசலுக்கு போனேன். ஓஷங்காபாத் ரயில் நிலையத்துக்கு இன்னும் ஒரு கி.மீ. மட்டுமே என்று செயலி சொன்னது. ரயில் காற்று வாங்கியபடி முகத்தில் மழைநீர் பட நின்றிருந்தேன்.. 

நான் வாந்தி எடுக்கும்போது என்னை பார்த்துக்கொண்டே போன இன்னொரு காவலர் அருகில் வந்தார். 

ஆர் யூ ஓகே? என்றார். யெஸ்.. அபி கோய் ப்ராப்லம் நை என்றேன். என்னவோ அவரோடு பேச பிடித்திருந்த்தது. சார் என்று பேச ஆரம்பித்தேன். காரணம் என் அண்ணன் ஓவியர் அர்ஜூனை நினைவுபடுத்தும் படியான முகம் அது.

ஹோஷங்காபாத் வந்தது. நல்ல மழை. குடையை விரித்தபடி இறங்கினேன். 

நானும் நர்மதையும்

இந்தியாவின் 5 புனித நதிகளில் ஒன்றான நர்மதை நதியை பார்க்கப்போகிறோம்.. மீண்டும் அந்த மாயாஜால நினைப்பு வந்துபோனது? (நாம யாரு? ஏன் இங்க இருக்கோம்?)

எந்த ஒரு இடத்திற்கும் போகும் முன் அந்த இடம் இன்னதென்று அறிவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் அது என்னதென்று அறிவதும். 

நர்மதை குறித்து நமக்கு புராணங்கள் ஆயிரம் கதைகள் சொல்லியிருக்கும். சிவனின் உடலிலிருந்து பிறப்பெடுக்கும் நீர் என்றும் இதற்கு ஒரு கதை உண்டு. 

வெள்ளக்காலங்களில் பிரவாகமெடுத்து ஓடும் நர்மதை நதியை காணொலிகளாகக் கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம், ஏதோ அந்நிய தேசத்து விநோதம் என்பதுபோல பார்த்துவிட்டு கடந்துவிடுவேன். ஆனால், இன்று நேரில் பார்க்கப் போகிறேன்… 

நர்மதா நதிக்கு போக  ஆட்டோ ஒன்று பிடித்துக்கொண்டேன். இந்திய வரைபடத்தில் வட இந்தியாவையும் தெனிந்தியாவையும் பிரிக்கும் ஒருகோடு போல (சும்மா ஒரு பேச்சுக்கு) தெரியும் இந்த நதிக்கரையில் சேத்தானிகாட் என்னும் இடம்தான் நாம் இறங்கப்போகும் இடம். 

இந்த பகுதியில் 64 யோகினிகளின் சந்நிதிகள் இடம்பெற்றுள்ளன அத்தனைக்கும் நர்மதை நதியுடன் ஒரு நெருக்கமான கதை இருக்கிறது. இதே பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு வந்த நர்மதை வெள்ளத்தின் போது எல்லா கோயில்களும் கலசம் தவிர்த்து தண்ணீரில் மிதந்தன. 

அதிகபட்சம் ஒரு 10 நிமிடம் பயணித்து நர்மதை நதி வந்திறங்கினேன். சில்லென்ற காற்றில் உருவமற்று ஒளிந்திருக்கும் நீர்த்துளிகள் மேலே பட்டு முதல் சிலிர்ப்பு வந்தபோது,  யப்பாஆஆஆ

திட்டமிட்டு கட்டப்பட்ட கான்கிரீட் கரை, எதிர்புறம் அக்கரைக்கே உண்டான எழிலுடன் கோயில்கள். பின்புலத்தில் மேகங்கள் தழுவும் மலைகள். காணொலிகளாகவும், வரைபடங்களாகவும் கண்டதை என் வாழ்வில் முதல் முறையாக காண்கிறேன். ஆம், மலையில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக தங்கி செல்வதை முதன் முதலில்நான் பார்த்த இடம் நர்மதையின் எதிர்க்கரைதான். 

இந்த இரண்டுக்கும் இடையில், அரபிக்கடல் நோக்கி அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது நர்மதை நதி.

இந்த நதிதானே அது.. நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் நீரை கொக்க கோலா கம்பெனிக்கு கொடுத்தது… 

இந்த நதிதானே அது, டைனோசர்கள் வாழ்ந்ததற்கான படிமங்களை இன்னும் தனக்குள் வைத்துக்கொண்டிருப்பது..

தமிழகத்திற்கு கிரிவலமென்றால், இங்கு நதிவலம். 3 ஆண்டுகள் 3 மாதம் பயணித்து இந்த நதியை முழுமையாக சுற்றி வலம் வருவது இங்கு ஒரு சடங்கு. இதற்கு பரிக்ரமா என்று பெயர். இந்த பரிக்ரமா செய்கிற போது நீங்கள் காலில் காலணி அணிதல் கூடாது. கையில் பணம் வைத்திருத்தல் கூடாது. சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்து மட்டுமே உண்ண வேண்டும் (செமல்ல)…

எங்கே போகிறது? எங்கிருந்து வருகிறது? வெறுமனே பார்ப்பவர்களுக்கு தெரியாது. ஆனால், இது ஆயிரங்களில் கி.மீட்டர்களை கடந்து வந்திருக்கும் பயணம். நான் என்னையும் இந்த நதியையும் சேர்த்துதான் சொல்கிறேன். 

நம்ப முடியவில்லையா? நான் ஒரு ஒப்புமை சொல்லவா? நான் வந்த ரயிலின் பெயர் என்ன சொன்னேன் நினைவிருக்கிறதா?.. அமர்கண்டக் எக்ஸ்பிரஸ். 

நர்மதை ஆறு பிறக்கும் இடமும் அதுதான். அமர்கண்டக் மலையில் உள்ள நர்மதா குண்டு என்னும் இடத்தில் பிறக்கிறது. அதுவும் ஆயிரங்களில் கிலோ மீட்டர்களைக் கடந்து இங்கு வந்திருக்கிறது. நானும் அப்படித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நதியைப்பற்றி ஏதும் தெரியாமல் சிலர் கடந்து செல்கிறார்கள். சிலர் கால்விட்டுப் பார்க்கிறார்கள். எவரையும் கண்டுகொள்வதில்லை நர்மதை. தன் பயணத்தைத் தொடர்கிறது. கடந்த சில நாட்களாக நானும் அப்படித்தான். 

கங்கையில் நீராடினால்,  மனிதர்கள் செய்த எல்லாப் பாவமும் நீங்கிவிடும் என்பது ஐதீகம் ஆனால் அந்த கங்கையே கருப்பு நிற உருவெடுத்து தன் பாவத்தை போக்கிக்கொள்ள நர்மதை நதிக்கு வருவதாகவும் கதைகள் உண்டு. 

ஆனால், ஆர்ப்பரித்து ஓடும் இந்த நர்மதைக்குள் இறங்கும் ஆசை அதுவரை எனக்கு வரவில்லை.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்

பிக்பாஸ் நாட்கள். நாள் 13: ”காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு…”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Pamban Mu Prasanth

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி1: பிடிக்காத பழம்

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

2 comments

அரவிந்தன் வே September 14, 2021 at 4:25 pm

கையை அலசி பார்க்கவாவது தோன்றியிருக்கும் அல்லவா அண்ணா!…

Reply
மகசூல் - பயணத்தொடர் - பகுதி 8 - Mei Ezhuththu September 15, 2021 at 5:24 pm

[…] மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7 […]

Reply

Leave a Comment