சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

SHARE

சென்னையில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட சமபவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று காலை 10:15 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் ரோடு அருகே கட்டிடம் ஒன்று குலுங்கியதாக கூறி அதில் இருந்தவர்கள் அனைவரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் ரோடு அருகே கட்டிடம் ஒன்று குலுங்கியதாக கூறி அதில் இருந்தவர்கள் அனைவரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நிலநடுக்கம் குறித்த உலக மக்களின் பீதியும் அதிகரித்து உள்ளது. இதனால் லேசான நடுக்கம் ஏற்பட்டாலும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது

.

இந்த நிலையில்தான் சென்னை ராயப்பேட்டையில் கட்டிடம் குழுங்கியதை பலர் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தொடர்ந்து செனனியில் நேற்று ஏற்பட்ட நில அதிர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தின் காரணமாக அனைவரும் அதை விட்டு வெளியேறினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனமும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் ராயப்பேட்டையில் குலுங்கிய கட்டிடத்திற்கு அருகே ராட்சத போர் அமைக்கும் பணி நடைபெற்ற காரணத்தால் கட்டிடம் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முந்தைய காலங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகளால் அவ்வப்போது சென்னையில் கட்டிடங்களில் லேசாக அதிர்வு உணரப்படும் என்று கூறப்படுகிறது.

இன்றும் அதேபோல் மெட்ரோ பணிகளால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக நில அதிர்வு ஏற்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதே நேரம் சென்னை அண்ணா நகரில் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வா அல்லது கட்டுமானப் பணிகளின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் இலங்கையிலும் நேற்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது.

இலங்கையின் தெற்கு பகுதியான புத்தளத்திலும், வெல்லவயம் பகுதிகளிலும் நேற்று காலை 11:44 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

பூமிக்கு அடியில் 7 முதல் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக இருந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மிதமான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.

இதேபோல் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதியும் புத்தலம், வெல்லவயம், மோனராகலா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளன.

சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது சென்னை வாசிகளை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

அதே சமயம் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும், தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும் விளக்கம் அளித்துள்ளன.

அந்த விளக்கத்தில், நில அதிர்வு அல்லது நில நடுக்கம் குறித்து பதிவு செய்வதற்கான தேசிய நில அதிர்வு மையத்தின் நிலையங்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கொடைக்கானலில் உள்ளன.

சென்னைக்கு அருகில் திருப்பதியிலும் ஒரு நிலையம் உள்ளது. இவை எதிலும் நில அதிர்வு ஏற்பட்டதற்கான பதிவு இல்லை. நில அதிர்வு ஏற்பட்டு அது 3 முதல் 5 நிலையங்களில் பதிவானால் மட்டுமே நில அதிர்வு ஏற்பட்டதை உறுதிப்படுத்த முடியும். ஆனால், ஒரு நிலையத்திலும் நில அதிர்வு பதிவாகவில்லை” என தெரிவித்துள்ளது.

அதே சமயம் இதனிடையே உத்தராகண்டில் எந்த நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

அதன் பாதிப்பு இந்தியாவில் எப்படி இருக்கும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன ? இந்த கேள்விகளுக்கான பதிலை காலம் தான் கூற வேண்டும்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

Leave a Comment