பிரபாகரன் உயிருடன் உள்ளார் : பரபரப்பை ஏற்படுத்திய பழ. நெடுமாறன் , நடந்தது என்ன?

SHARE

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை; அவர் மரணம் அடைந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

இலங்கையில் போராளிகள் நடத்திய போரின் போது இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

தற்போது பிரபாகரன் இறந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மரணம் குறைத்த சில குழப்பமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.

இந்தநிலையில் தற்போது பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும் இது அவரது அனுமதியுடன் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ,நெடுமாறன் செய்தியாளர்களின் முன்னிலையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே சமயம் இந்த தகவலை இலங்கை ராணுவம் தரப்பில் மறுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் கூறுகையில், பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டுவிட்டார்; அதற்கான ஆதாரங்கள் உள்ளன. பிரபாகரன் கொல்லப்பட்டதை டிஎன்ஏ ஆதாரங்கள் மூலம் உறுதி செய்தோம். 2009ம் ஆண்டு மே 18-ந் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல்கள். இதில் சந்தேகமே இல்லை என உறுதிபடக் கூறினார்.

அதே போல் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் இதனை மறுத்துள்ளனர் குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் பழநெடுமாறனின் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினர் அப்போது பேசிய சீமான்

என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பி செல்லும் கோழை என்று நினைக்கிறீர்களா? போர் புரிந்து ஒரு பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம் 15 ஆண்டுகள் பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன் வந்துவிட்டு தான் சொல்லுவார். அதுதான் அவரின் பழக்கம். தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். அவர்கள் கூறியது போல் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறியதுபோல் தோன்றும்போது தோன்றட்டும். ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே திடீர் என்று கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பவருக்கு அவர் அன்றுமுதல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவோம் என்றார். அதுபோல் ஐயா நெடுமாறன் கூறியவாறு எங்கள் அண்ணன் நேரில் வந்துவிட்டால், இதை பற்றி வந்தவுடன் பேசுவோம் எனக் கூறியுள்ளார்.

பிரபாகரனின் நெருங்கிய சகாவான கேபி என்ற குமரன் பத்மநாபன், பிபிசி க்கு அளித்துள்ள பேட்டியில் பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் . இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்பட்டது.

அதே சமயம் இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார்.

அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார்.

உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம். அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது. அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது.

தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன். ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது.

இவ்வாறு இலங்கை ராணுவமும் புலிகள் அமைப்பு பற்றி நன்கு தெரிந்தவார்களும் பழ நெடுமாறனின் கருத்தினை ஏற்க மறுகின்றனர் என்றே கூறலாம் அதே சமயம் போரில் இறந்தது பிரபாகரன் தான் என்பதற்கான டீ.என்.ஏ பரிசோதனையை இலங்கை அரசு இன்று வரை தாக்கல் செய்யவில்லை. ஆகவே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சந்தேகம் தொடர்ந்து உள்ளதாகவும் கூறுகின்றனர்

அதே சமயம் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் சில நாட்களுக்கு முன்பாக தொடர்புகொள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இன்று தஞ்சாவூரில், பழ. நெடுமாறன் தலைமையில் ஈழத்திற்கு ஆதரவாக உள்ள தமிழ்நாட்டு தலைவர்களை ஒன்று திரட்டி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த தகவலை வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.

{ஆதாரம் : பிபிசி தமிழ் }


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம் … என் தம்பிய திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!

Admin

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

ஆர்க்காடு இளவரசரிடம் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

கலைஞரின் பொற்கால ஆட்சியின் பொன்னான திட்டங்கள் – ஓர் பார்வை

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

அமைச்சர் துரைமுருகனின்அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் : பூவுலகின் நண்பர்கள்

Admin

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Admin

Leave a Comment