சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

SHARE

தமிழ்நாட்டில் சில இடங்களில் சீனி அல்லது வெள்ளைச் சர்க்கரையை அஸ்கா என்று அழைக்கின்றனர். எங்கிருந்து வந்தது இந்தச் சொல்?.

ஆசியாவின் முதல் வெள்ளைச் சர்க்கரை ஆலையானது கி.பி.1824ஆம் ஆண்டில் ஒரிசா மாநிலம் கஞ்சம் வட்டத்தில் உள்ள அஸ்கா என்ற நகரத்தில் நிறுவப்பட்டது. அதுவரை பழுப்பு நிறம் மற்றும் பொன்னிறத்திலான சர்க்கரைகளை மட்டுமே உண்டு வந்த மக்கள் அஸ்காவில் உருவான வெள்ளை நிறச் சர்க்கரையைப் பார்த்தபோது ‘அஸ்கா சர்க்கரை’ என்றே அதை அழைத்தனர்.

பின்னர் அஸ்கா என்ற சொல்லே வெள்ளைச் சர்க்கரையைக் குறிக்கும் சொல்லாக மாறிப் போனது. இதனால் தமிழ் மட்டுமின்றி இன்னும் பல்வேறு மொழிகளிலும் அஸ்கா என்ற சொல் வெள்ளைச் சர்க்கரையைக் குறிக்கும் சொல்லாக இன்றும் புழங்குகின்றது.

அஸ்காவின் வருகை காரணமாக ஒரிஸா மக்கள் அதிக இனிப்பு சாப்பிடுபவர்களாக ஆனார்கள். பெரும்பாலான மக்கள் ஜிலேபியை காலை உணவாக்கிக் கொண்டார்கள். பல்வேறு உணவுப் பழக்க வழக்கங்கள் அஸ்காவால் அழிந்தன. இன்று இந்திய நாடானது சர்க்கரை நோயாளிகளின் கூடாரமாக மாறி இருப்பதற்கு இந்த அஸ்காவும் ஒரு காரணம் – என்பது வேறு கதை!.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

கொற்கை அகழாய்வில் கிடைத்த பழங்கால வெளிநாட்டு நாணயம்…!

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

Leave a Comment