சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

SHARE

நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை தொழிற்கை முத்திரைகளைப் பார்த்தோம்.. 

அடிக்கடி பார்க்கின்ற, குழப்பம் ஏற்படுத்தக் கூடிய சில தொழிற்கை முத்திரைகளைக் கொண்ட கடவுள் உருவங்களை உங்களால் அடையாளம் காணமுடிகின்றதா? – என ஒரு பயிற்சியாகப் பார்ப்போம்…

உன்னை காக்க நான் இருக்கிறேன் என்று வலது கரம் அபய முத்திரையுடன்..

உனக்கு வேண்டியதை வழங்குறேன் என்று இடது கரம் வரத முத்திரையுடன் 

மகாலெட்சுமி படிமம்.

பின்னிரு கரங்கள் கர்த்தரி முத்திரையில் மான், மழு ஏந்த..

வலது முன் கையில் காக்கும் அபய முத்திரை.

இடது முன் கையில் ’இன்னல் நீங்கி அமைதியடைவீர்’ என்பதைக் குறிக்கும் சிம்மகர்ண ஹஸ்தம்.

சுகாசன மூர்த்தி.

வலது கையில், கடக முத்திரையில் மழு ஏந்தி…

இடது கை சிம்ம கர்ண முத்திரையுடன் அமைதியை வழங்கும்…

சண்டிகேசுவரர்..

மேல் இரு கை கர்த்தரி முத்திரையில் கமண்டலம் மற்றும் அக்கமாலை ஏந்த,

கீழ் வலது கை அபய முத்திரை காட்ட,

கீழ் இடது கை இடுப்பில் ஊன்றியவாறு கடி ஹஸ்தம்.

படைப்புக் கடவுள் பிரம்மா.

எச்சரிக்கையுடன் செல்லுங்கள் – எனக் கூறும் தர்ஜனீ ஹஸ்தம்..

துவாரபாலகர்.

தளிர்க்கையாம்…

பல்லவ ஹஸ்தம்..

ரிஷபாந்திகர்.

முஷ்டி ஹஸ்தம் சூலத்தை ஏந்தி, சூசி ஹஸ்தம்  

இமையவனை சுட்ட, அல பத்ம  ஹஸ்தம் மார்க்கண்டேயனை காத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

கால சம்ஹார மூர்த்தி.

முதலாமர்..

வலது கரத்தில் சூசி முத்திரை உள்ளே இருக்கும் இறைவனை சுட்டுகிறது.  இடது கையிலுள்ள விஸ்வமயமுத்திரை இறைவனின் அளப்பரிய சக்தியை வியப்புடன் குறிக்கிறது.

இரண்டாமவர்.

கீழ் கையில் விஸ்வமயமுத்திரை.

மேல் கையில், ’வியப்புடன் இவரைக் காணும் நீங்கள் மலர்ந்த தாமரை போல் மகிழ்ச்சியடைவீர்கள்’  என்பதைக் குறிக்க அல பத்ம ஹஸ்தம்.

இரு துவாரபாலகர்கள்.

தொடரும்…

  • மா.மாரிராஜன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 21 “அபிஷேக் அவுட்”

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

1 comment

saravanapavan February 15, 2023 at 1:03 pm

ஐயா! நான் இலங்கையில் திருகோணமலையில் வாழ்கின்றேன். உங்கள் கட்டுரைகள் மிக மிக சிறப்பாக உள்ளது. சில சந்தேகங்கள் உண்டு . உங்கள் தொடர்பு எண் கிடைத்தால் பெரு மகிழ்ச்சி.

Reply

Leave a Comment