“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் எதிரணியை மொத்தமாக வீழ்த்திவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராஸ் டெய்லர். அவர் எழுதியிருப்பதாவது,

“இப்போது இந்திய அணி வலுவாக அரையிறுதிக்கு வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த அரையிறுதிக்கு இந்திய அணி வலுவாக வந்து நின்றது. ஆனால், நாங்களோ நெட் ரன்ரேட்டுக்காகப் போராடி அந்த இடத்திற்கு வந்திருந்தோம். இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் தருவாயில் நியூசிலாந்து ஓர் அபாயகரமான அணி. இந்திய அணியைப் எதிர்க்கும் வல்லமை உடையது நியூசிலாந்து மட்டுமே. மும்பை மைதானத்தின் சூழலைப் புரிந்து கொண்டு தகவமைத்து ஆடுவது நியூசிலாந்துக்குச் சவாலாக இருக்க வாய்ப்புண்டு. பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே முதல் 10 ஓவர்கள் ரொம்பவே முக்கியம். நியூசிலாந்து முதலில் பந்து வீசினால் அந்த 10 ஓவர்களுக்குள் ஒரு 2 – 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட வேண்டும். குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித், கில், விராட் கோலி. இவர்களது விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தினால் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்த முடியும்.

அதே நேரம் பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய பௌலர்களை பாதுகாப்பாக எதிர்கொள்ளும் அதேவேளையில் ரன்களையும் சேர்க்க வேண்டும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் இடம் கிடைத்தாலும் எதிரணியை மொத்தமாக வீழ்த்திவிடுவார்கள். இப்போது ஸ்பின்னர்களும் அருமையாக விளையாடிகொண்டிருக்கிறார்கள். ரச்சின் ரவீந்திராவுக்கு இந்த போட்டி ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ராகுல் டிராவிட், சச்சின் இருவரின் பெயரையும் ஒருங்கே கொண்டு மும்பையில் இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் ஆடுவது மறக்கமுடியாத தருணம். இந்த அரையிறுதிப் போட்டியில் மட்டுமல்ல, நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்திலுமே ரச்சின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பது நிச்சயம்.புதன்கிழமை நடக்கும் அரையிறுதியில் அதிர்ஷ்டம் நியூசிலாந்து பக்கம் இருக்கும் என நம்புகிறேன்” என ராஸ் டெய்லர் கூறியிருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்த கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்திய அணி இப்போது உள்ள வலுவான நிலையைப் பார்க்கும்போது, நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே பின்னூட்டமிட்டு வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

IND VS SL :முதல் ஒருநாள் போட்டி .. இந்திய அணி வெற்றி!

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment