மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

SHARE

இந்திப் பரீட்சை

பெற்றோர்/பாதுகாவலர் ஆதரவற்ற அல்லது இழந்த குழந்தைகளுக்கான தங்குமிடம் அது. முதல் நாள் நாம் சந்தித்த ஜோஜு அண்ண்ன் பணிபுரியும் நிறுவனத்தின் காப்பகம். 

உள்ளே போனேன். அது சாப்பாட்டு நேரம். நாங்கள் உள்ளே நுழையவும் மாணவர்கள் உணவுக்கு முந்தைய இறைவழிபாட்டை முடிக்கவும் சரியாக இருந்தது. 

மாணவர்களுக்கு ஜோஜு அண்ணன் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஆதிவாசி சமூகம் குறித்து அறிந்துகொள்ள வந்திருக்கிறார். இவரை வெல்கம் செய்யுங்கள் என்றார். 

கைகளை மூன்று முறை இசையாக தட்டி வரவேற்றனர். என்ன நடந்தாலும் குழந்தைகள் மத்தியில் போனை வெளியில் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், போன் இல்லாவிட்டால் இந்தியை எப்படி சமாளிப்பது? 

இழுத்து பெருமூச்சு விட்டேன். இந்தியா நானா பாத்துவிடலாம். குழந்தைகள் என்னிடம் மேரா நாம் இன்னது ஆப்கா என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் பதில் சொன்னேன். ஒரே பதில்தான்.

ஒரு பையன் மட்டும் தான் ஏதோ இந்தியில் கேட்டான். இங்கு எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்பதாக தோன்றியது. பதில் சொல்ல முயற்சிப்பதற்குள், மீண்டும் கேட்டான். கோன்சா ஆதிவாசி ஆப் மிலா அபி…

நீ எந்த ஆதிவாசி என்று கேட்கிறானா? அல்லது எந்த ஆதிவாசியை பார்த்தீர்கள் என்று கேட்கிறானா? 

சரி.எந்த ஆதிவாசியை பார்த்தோம் என்றே சொல்வோம். கோண்டு என்றேன். கோண்ட் என்று கண்களை விரித்தான்.. “ஆஹ், ஆஹ்ன். கோண்ட் ” என்றேன். 

மேலும் ஏதோ சொன்னான். நை சம்ஜே என்றேன். கோபத்தில் போய்விட்டான். 

பிறகு சாப்பிட்டோம். ஞாயிற்றுக்கிழமை என்றால் மாணவர்களே சமைப்பார்களாம். அன்று சப்பாத்தி, சோறு, கோழிக் குழம்பு என அமர்க்களப்படுத்தி இருந்தார்கள்.

சாப்பிட்டோம். நான் மாணவர்களுடன் அமர்ந்திருந்தேன். அதில், கரன், அவினாஷ், அவினாஷின் தம்பி ஸ்யாம் , ராம் (பின் மிக நெருக்கமானான்) என எல்லோரும் எனக்கு இந்தி பாடமெடுக்க தொடங்கினர். 

அவினாஷுக்கு ஆங்கிலமும் பேச தெரிந்திருந்த்து. 

சாப்பிட்டு முடித்த பிறகு, வெளியே நின்று வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவினாஷ் சொன்னான். உங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் தானே? 

நான் செய்தித்தாளில் பார்த்தேன். ஏதோ ரயிலில் தண்ணீர் கொண்டு வருகிறார்களாமே என்றான். அசந்து போனேன். (சென்னை வறட்சியை சமாளிக்க ராணிப்பேட்டையில் இருந்து ரயில் மூலம் நீர் கொண்டு வந்தது தமிழக அரசு – 2019இல்)

இதுமட்டுமல்ல சற்று முன்பு, இராமேஸ்வரம் என்றதும் அப்துல்கலாம் குறித்து பேசியவன், அது குறித்து இன்னொருத்தனுக்கு விளக்கும்போது  “அப்துல்கலாம் ஏ தமிழ் வாலா”என்றான் 

இது ஆச்சரியம் அல்ல.  “சந்திரயான் 2 அனுப்பிய சிவனும் தமிழ்வாலா தானே” என்று வேறு கேட்டான். 

அவனுக்கு நேற்றைய தினம் சந்திரயானில் நடந்த செய்திவரை தெரிந்திருந்தது. 

சாப்பாட்டுக்கு பிறகு அவர்களின் திட்டம் சாஹோ படம் பார்ப்பது. ஆனால்  எனக்காக அதனை தவிர்த்தார்கள். அப்போதும் அவினாஷ் என்னை ஆச்சரியப்படுத்தினான். 

“சாஹோ மே லிப்சிங்க் நை அச்சா”என்றான். அடப்பாவிங்களா என்று நினைத்துக்கொண்டேன்.. 

குழந்தைகளிடம் ஆச்சரியப்படுவதற்கு ஆயிரம் இருந்தாலும், மனம் என்னவோ தம்மின் தம்மக்கள் அறிவாளித்தனத்தையே அதிகம் மெச்சுகிறது. (எனக்கு தோன்றியது)

சரி படம் பார்க்க போகலாம் என்றேன். அவர்களோடு படம் பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த படம் சாஹோ என்பதையும் தாண்டி (மொக்கைப் படம், முன்பே பார்த்தும் கூட) அவர்களோடு ஏதோ ஒன்று என்னை இருக்க வைத்தது. 

கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தேன். படம் பிடிக்காத இருவர் வெளியே வந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்கள். போனேன். ஆவ் பையா என்றான்.

டாலர் குறியீட்டை முப்பரிமானத்தில் வரைந்துகொண்டிருந்தார்கள் இருவரும். நான் அவர்களுக்கான நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். 

சிறந்த ஆளுமைகளின் குழந்தை பருவம் குறித்த தொகுப்பு அது. உள்ளே பார்த்தேன். இரண்டாவதாக இருந்த பெயர் கண்ணில் பட்டது. அது மேதா பட்கர் குறித்தது. வாசிக்கத் தொடங்கினேன். தன் கனவு நூலகத்தை மேதா பட்கர் முதன் முதலில் தொடங்கிய போது அவரது வயது 12ஆம். 

நினைத்துக்கொண்டேன். என் தெருவில் உள்ள குழந்தைகளை கூட்டி, ஒரு அமைப்பு ஆக்கி, நான் நடத்திய நூலகம் நினைவுக்கு வந்தது. நூலகம் மட்டுமே நினைவுக்கு வந்தது. போன எந்த நூலும் திரும்பி வரவில்லை. சரி விடுங்கள் அது வேறு கதை. 

எழுந்து பார்த்தபோது (ஆம். தூங்கியிருந்தேன். ) டீ டைம். குழந்தைகளுக்கு பேரீச்சையும், முளைகட்டிய கொண்டைக் கடலையும் கொடுக்கப்பட்டது. 

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. நான் சொன்ன ராம். எங்கிருந்து வந்தான் என்பது அவனுக்கே தெரியாது. ஏதோ வெள்ளம் அதிலிருந்து மீண்டதாக சொன்னான். 

நெடுநேரம் அவர்களோடு கழிந்தது. என்ன பேசினோம் என்பது எனக்கு நினைவில்லை. ஆனால், ஆனந்தம் அடித்தங்கலாக, ரொம்ப நேரத்துக்கு பிறகு கிளம்பி என் அறைக்கு வந்தேன். போகும் வழியில் வரும்போது இருந்த வெள்ளம், இப்போது வடிந்து ரோடு வெளியே தெரிய ஆரம்பித்திருந்தது. அந்த ரோட்டின் வெளியே வந்தேன். வரும்போது அங்கிருந்த மேம்பாலத்துக்கு அடியில் நடந்து வந்ததால் இந்த முறை பாலத்தின் மேலே ஏறி நடந்து போகலாம் என்று நினைத்தேன். 

பாலத்தில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன அதில் ஏறி நடக்கத் தொடங்கினேன். இது மத்திய பிரதேசத்தின் மத்திய இடம் என்றார்கள். அப்படி என்றால் இப்போது நான் நின்று கொண்டிருக்கும் இடம் இந்தியாவின் மையம். அங்கிருந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். (ஆனால், அது உண்மையில்லை. இந்தியாவின் மையம் ஜீரோ பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. அது மகாராஷ்டிராவில், நாக்பூரில் இருக்கிறது )

இட்டார்சி பேருந்து நிலையம் வந்தது. அறைக்கு வந்து படுத்தேன். நர்மதையும் இந்த குழந்தைகளும் ஒன்றுக்கு ஒன்று  தொடர்பற்றவையாக இருந்தாலும் என்னுடைய இந்தப் பயணத்தில் இரண்டும் தொடர்புள்ளவையாகி விட்டன. ஆனால், என் திருமண அழைப்பிதழ் வைக்க மத்தியப் பிரதேசமும் ஒருமுறை வரவேண்டும் என்னும் அளவுக்கு, ஒரு சொந்தம் அமையப்போகிறதென்பது அப்போது எனக்குத் தெரியாது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“நீ வேணா சண்டைக்கு வா” … அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்..

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை கூட்டம்..!!

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

அதிமுக தோழர்களே… தொடரும் ஸ்டாலின் நாகரிகம்

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு கொடுக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

Admin

1 comment

அரவிந்தன் வே September 18, 2021 at 9:44 am

இந்தி இப்போது சுலமானதாக தெரிந்ததா அண்ணா….

Reply

Leave a Comment