வருகிற சனிக்கிழமை (18..2.2023) அன்று வரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சிவராத்திரி திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல பிரபலங்கள் உலகளவில் கலந்து கொண்டு பூஜைகளும், ஆடல்களும் பாடல்களுமாக அத்தினத்தைக் கொண்டாடுவது வழக்கம்.
அதிலும், திரை பிரபலங்களான தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உட்பட பல பெரும் நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல பல முக்கிய அரசியல் பிரமுகர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வது வழக்கம்.

ஈஷா நிறுவனம் பழங்குடி மக்களின் நிலத்தை அபகரித்தும், யானைகளின் வாழ்விடத்தையும் நொய்யல் நதி உற்பத்தியாகின்ற இடத்தையும் ஆக்கிரமித்து சுற்றுப்புற சுவர்களை எழுப்பி உள்ளதாகவும், ஈஷா நிறுவனத்தை எதிர்த்து பழங்குடி மக்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பழங்குடியின மக்களில் இருந்து இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு ஈஷாவில் நடைபெறுகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு வருகை தருவது என்பது பழங்குடி மக்களின் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாட்டின் மிக உயரிய பொறுப்பில் உள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள், ஈஷா மையத்தின் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது ஈஷா மையத்தின் சட்டவிரோத செயலுக்கு கேடயமாக அமைந்துவிடும். சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்புடைய தலைவர்கள், அதிகாரிகள் சட்டவிரோத சாமியரின் வேண்டுகோளை ஏற்று இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்வது வருந்தத்தக்கது என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்