கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு வருகின்றதா?: மருத்துவர்கள் கூறுவது என்ன?

SHARE

கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மாரடைப்பு வருவதாக செய்திகள் வெளியாகிஅச்சத்தைக் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு ஆபத்தா? அது குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

எஸ்.ஏ.டி.எஸ். (SADS – Sudden arrhythmic death syndrome) எனப்படும் இளம் வயது மாரடைப்பானது கொரோனா தடுப்பூசிகள் வருவதற்கு முன்னர் இருந்தே இருக்கும் ஒரு நிகழ்வுதான். கார்டியோ மையோபதி என்னும் இதய தசை பாதிப்புகளும் திடீர் மரணங்களை உண்டாக்க கூடும். இதய தசைகளில் மிக அதிக அளவில் அழுத்தம் அல்லது வேலைப்பளு சுமத்தப்படும் போது அவை இதயம் அல்லது அதில் உள்ள திசுக்களை பாதித்து திடீர் மரணத்திற்கு வழி வகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளம் வயதினருடைய மாரடைப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் – என

தடித்த இதயத் தசைகள்
இதயத்துடிப்பு பிரச்சினைகள்
மார்புகளில் ஏற்பட்டுள்ள காயம்
பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு – ஆகியவற்றை மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.

மேலும் இது போன்ற மரணங்களை சந்தேகிக்கும் முன்னர் நோயாளியின் மருத்துவ பின்னணியை முதலில் சோதிக்க வேண்டும். முக்கியமாக கரோனரி ஆர்டரி டிசிஸ் உளதா என.

அதே சமயம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இதுபோன்ற கார்டியாக் அரெஸ்ட் அதிகம் ஏற்படுகின்றன என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு டாக்டர் ஓ.பி. யாதவ் மற்றும் விவேகா குமார் ஆகிய இருவரும் பேட்டியளித்தனர் அதில் அவர்கள் கூறியது.

கொரோனா காரணமாக உடலில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. நுரையீரல், இதயம், கால்களின் நரம்புகள் மற்றும் மூளையில் இந்தக் கட்டிகள் உருவாகலாம் என்று டாக்டர். ஓ.பி. யாதவ் மற்றும் டாக்டர் விவேகா குமார் ஆகிய இருவரும் கூறி உள்ளனர்.

”அதனால் ரத்தத்தை நீர்க்கச்செய்ய மருந்துகளும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன, நோயாளிகள் உடற்பயிற்சி செய்யவும், நடைப் பயிற்சி செய்யவும் அறிவுறுத்துகிறோம்.

சமீபத்தில் ஒருவருக்குக் கொரோனா வந்திருக்கலாம், அதன் பிறகு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். எனவே இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை” — என்றும் ஓ.பி. யாதவ் தெரிவித்தார்.

”கொரோனா தடுப்பூசியும் ஒரு வகையில் கொரோனா தொற்று போன்றதுதான். கொரோனா மிகவும் கடுமையான தொற்று நோய். மேலும் அதன் காரணமாக ரத்த உறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரத்த உறைவு இதயத்தில் இருந்தால் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இது மூளையில் ஏற்பட்டால் ப்ரெயின் ஸ்ட்ரோக் ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் இதற்குக் காரணமாகும்” – என்கிறார் டாக்டர் விவேகா குமார்.

மேலும் கொரோனா தொற்று ஒருவர் உடலில் இருந்து கொண்டு எந்த வித அறிகுறியும் வெளிப்படுத்தாமல், திடீரென மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஏனெனில் கொரோனா தொற்றினால் மாரடைப்புகள் ஏற்படுவது என்பது மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என முதலில் மருத்துவர்கள் கூறியதை பலரும் ஏற்ற நிலையில் தற்போது அந்த கருத்தை முழுவதும் ஏற்க பலர் மறுக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா ”பிற கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் ஆபத்தானவை. இதயம் மற்றும் ரத்தநாளங்கள் தொடர்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை அவை ஏற்படுத்தும். பிரிட்டனில் 97 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், 8 லட்சம் பேருக்கு மிக மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டு தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும் போது, இந்தியாவில் மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்படுவது ஏன்? இந்தியாவின் இந்த தடுப்பூசியின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்த தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” – என்றார்.

கொரோனா பாதிப்புகளை உடற்பயிற்சிகள் கட்டுப்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், கட்டுடலுக்குப் பெயர்பெற்ற நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் திடீர் மாரடைப்பால் இறக்கும்போது அந்த செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகின்றது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட கோவிஷீல்டு ஊசிகளை எந்த அடிப்படையில் இந்தியா அனுமதிக்கின்றது? – என்ற கேள்வியும் எழுகின்றது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

Leave a Comment