தற்குறி – என்றால் என்ன?

SHARE

மக்கள் மத்தியில் இன்றும் புழங்கும் பழந்தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் ’தற்குறி’ என்பது. ஆனால் அதன் பொருள் நம்மில் பலருக்கும் தெரியாது. திரைப்படங்களில் ‘அய்யா… நான் படிப்பறிவில்லாத தற்குறிங்க ஐயா…’ என்பது போன்ற வசனங்கள் இடம் பெறுவதால், கல்வி அறிவின்மையோடு தொடர்புடைய சொல் இது என்பது வரையில்தான் சாமானிய மக்களால் ஊகிக்க முடிகின்றது. உண்மையில் தற்குறி என்ற சொல்லுக்கான தெளிவான பொருள் என்ன?.

காகிதங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்புவரை பனை ஓலைகள், செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள் – ஆகியவைதான் ஆவணங்களாகப் பயன்படுத்தப்பட்டன. சொத்துகள் விற்கப்படும்போது அரசர்கள் காலத்திலும் இப்போது உள்ள முறையைப் போன்றே பத்திரம் தயாரித்து, தொடர்புடையவர்களும், சாட்சிகளும் கையெழுத்தும் போட்டார்கள்.

இந்தப் பத்திரங்கள் பொதுவாகப் பனை ஓலைகளால் ஆனவைதான். பனை ஓலைகள் அழியலாம் என்ற அச்சம் இருப்பவர்கள் ஓலையில் உள்ள அதே செய்தியைப் பட்டயங்களிலோ, கல்வெட்டுகளிலோ பிரதி எடுத்துக் கொள்வார்கள்.

இப்படியாக ஆவணங்களை உருவாக்கும்போது, இவற்றில் கையெழுத்திட வேண்டியவர்களில் யாராவது படிப்பறிவு அற்றவர்களாக இருந்தால், அவர்கள் கையெழுத்துக்குப் பதிலாக ஒரு கீறலை பனை ஓலையில் எழுத்தாணியால் உருவாக்கினார்கள். இப்போது கைநாட்டு ஒருவரின் கையெழுத்துக்கு பதிலாகப் பெறப்படுவதைப் போலவே இந்தக் கீறலும் அந்தக் காலத்தில் கையெழுத்துக்கு பதிலாக ஏற்கப்பட்டது.

ஒவ்வொரு நபரின் கீறல்களும் தனித்துவம் மிக்கவை என்பதால் இவையும் கையெழுத்தைப் போலவே கருதப்பட்டன. கையெழுத்துக்குப் பதிலான இந்தக் கீறலின் பெயர்தான் தற்குறி – என்பது. இந்தக் கீறலை ஓலையில் இடும் நடைமுறை ‘தற்குறியிடுதல்’ என்று அழைக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் படிக்காதவர்கள்தான் தற்குறி இட்டார்கள் என்பதால், தற்குறி என்ற சொல் படிக்காதவர்களைக் குறிக்கப் பயன்பட்டது, இன்றும் பல இடங்களில் அதே பொருளில் இந்த சொல் புழங்குகின்றது. தற்குறி என்ற சொல் கைநாட்டு என்பதற்கு இணையான சொல் ஆகும்.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

Admin

Leave a Comment