சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

SHARE

Tally ERP Crack

சென்னை : 

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

கர்நாடகாவின் கோட்டேகிரி என்ற கிராமத்தில் சில ஆண்டுகள் முன்பு ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலின் அருகே இராஜராஜ சோழனின் முதல் பேரனாகிய ஸ்ரீ உடையார் இராஜாதிராஜ தேவர் என்ற தமிழ் அரசர் குறித்த கல்வெட்டுகள் இருப்பதை  1947ல் ஐரோப்பிய தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கோட்டேகிரியில் இராஜேந்திர சோழீஸ்வரம் என்ற கோவில் இருந்துள்ளது, இது 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் ஆகும். 

இக்கோவிலில் இருந்த பஞ்சலோக சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் திருடப்பட்டுள்ளன, கோவிலையும் இப்போது காணவில்லை. கோட்டேகிரியில், 949 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னரால் கட்டப்பட்ட இராஜேந்திர சோழீஸ்வரத்தை இடித்துவிட்டு புதிதாக சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளதா? – என்பதை தொல்லியல் துறை வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். அங்கு திருடப்பட்ட சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களை மீட்டு தமிழகத்திற்கு எடுத்து வர வேண்டும். கோட்டேகிரியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக் கல்வெட்டைத் தமிழகத்திற்கு கொண்டு வந்து அரிய பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் – என்று பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டு உள்ளார்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழ் அரசர்களின் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்த நிலையில், இப்போது ஒரு பெரும் கோவிலே காணாமல் போயுள்ளது வரலாற்று ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

அணிலை தொடர்ந்து பாம்பு.. சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி

Admin

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

யூடியூபர் சிக்கந்தரை செருப்பால் அடித்ததால் சூர்யாதேவி மீது வழக்கு பதிவு.!!!

Admin

Leave a Comment