ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

SHARE

TablePlus Mac Crack

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி கிடைத்து உள்ளது. இதனால் தெரியவரும் தொல்லியல் செய்திகள் என்னென்ன என்று பார்ப்போம்…

இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு நடந்த இடம் தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் ஆகும். கி.பி.1876ஆம் ஆண்டில் இங்கு முதன்முதலாக அகழாய்வு நடந்தது. பின்னர் ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகளை மேற்கொண்டனர். சுதந்திர இந்தியாவில் நெடுங்காலமாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் தொல்லியல்துறை 2004-2005ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தியது, ஆனால் அகழாய்வு அறிக்கை நெடுங்காலமாக வெளியாகவில்லை. ஆதிச்ச நல்லூரில் 3800 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டும் ஆய்வு அறிக்கை வெளியாகவில்லை என்பதால் சர்ச்சை எழுந்தது. இது பற்றி வழக்கும் தொடுக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற விசாரணையின்போது ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட 2 ஆய்வு மாதிரிகளின் ஆண்டுகளை மட்டும் மத்திய தொல்லியல்துறை வெளியிட்டது. அதனால்  முதல் மாதிரி  கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 எனத் தெரியவந்து. 

பின்னர் தமிழக தொல்லியல்துறை ஆதிச்சநல்லூரிலும் அதனைச் சுற்றியுள்ள தொல்லியல் களங்களிலும் அகழாய்வுகளை நடத்தி வருகின்றது. ஆதிச்சநல்லூருக்கு அருகே சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பீட்டா அனாலிட்டிகல் லேபரட்டரி-க்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. AMS Carbon dating – முறையில் ஆய்வு செய்ததில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1144எனக் கண்டறியப்பட்டு உள்ளது.

ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரியா அகழாய்வு மேற்கொண்டபோது அவருக்கு தங்கம், வெங்கலம் ஆகிய உலோகங்களால் ஆன பொருட்கள் அதிகம் கிடைத்தன. ஆனால் இந்திய தொல்லியல்துறையினர் மற்றும் தமிழக தொல்லியல்துறையினரின் அகழாய்வுகளில் அவை அதிகம் கிடைக்கவில்லை. அலெக்ஸாண்டர் ரியா இந்தப் புதைமேட்டின் மையப் பகுதியாக எதைச் சொன்னார்? – என்றுகண்டுபிடிக்க தமிழக தொல்லியல்துறை பெரிதும் முயன்று வந்தது.

இந்நிலையில்தான் ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரியா ஆய்வு செய்த சி-சைட் பகுதியில் தங்கத்தால் ஆன 20 கேரட் தூய்மையுள்ள பண்டைய காதணி கிடைத்துள்ளது, இது 3000 ஆண்டுகள் பழமையானதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் இந்தக் காதணி வெறும் ஓரடி ஆழத்தில் கிடைத்திருப்பதால், இன்னும் பல முக்கியமான தொல்லியல் பொருட்கள் இந்த இடத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவில் இந்த தங்கக் காதணி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

Leave a Comment