அடுத்து இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா? விஞ்ஞானியின் கணிப்பால் அச்சம்!

SHARE

துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்த துருக்கி, சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒரே ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, பிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, பிப்ரவரி 3ஆம் தேதி தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாள்களிலோ நிலநடுக்கம் நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்திய பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் பிராங்க் ஹோக்கர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிராங்க் ஹோகர்பீட்ஸ் பேசிய வீடியோவை தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

நிலநடுங்களின் தீவிரம் 5 நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: மண்டலம் 1, மண்டலம் 2, மண்டலம் 3, மண்டலம் 4 மற்றும் மண்டலம் 5, கடைசியாக மிகவும் ஆபத்தானது. இருப்பினும், இந்தியாவில், பகுதிகள் 4 நில அதிர்வு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குஜராத், இமாச்சலப் பிரதேசம், பீகார், அசாம், மணிப்பூர், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் அந்தமான் & நிக்கோபார் உள்ளிட்ட மாநிலங்கள் மண்டலம் 5 க்குள் வருவதால், அதிக தீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26, 2001 அன்று, குஜராத்தில் 7.6 ரிக்டர் அளவிலான அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. புஜ் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அந்த பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

Nagappan

பொய் பேசும் நரையெல்லாம் மை பூசி மாத்திக்கோ… 100வது வயதை எட்டிய 3 மூதாட்டிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

Admin

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

Admin

என் பதிவையே தூக்கிட்டிங்களா.. இனி உங்களுக்கு இடமில்லை .. நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை போட்ட அதிபர்

Admin

நான் இந்தியன் என்பது எப்போதும்என்னுள் இருக்கிறது! – சுந்தர் பிச்சை பேச்சு

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா..6300 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண்கள்- வைரல் வீடியோ

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

Leave a Comment