பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

SHARE

இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் முக்கிய சண்டை. கமல் இந்த விஷயத்தை எப்படிப் பாக்கிறார்?. யாரை எல்லாம் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறார்? – என்று எதிர்பார்த்த எபிசோட். 

தாமரையும் சுருதியும் கூட, ”நான் அவர்கிட்டயே பேசிக்கிறேன்” என்று கோபத்தை அடக்கிவைத்துக் கொண்டு இருந்தனர். கமலும் வந்தவுடன் அதை இதை என்று வளக்காமல், தாமரையைப் பார்த்து ”சொல்லுங்க தாமரை, என்கிட்ட பேசணும்னு வெயிட் பண்றீங்க, சொல்லுங்க ”என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.  

தாமரையும் நடந்தது அனைத்தையும் எமோஷன்ஸ் மாறாமல் கூறினார். அப்பப்பா எத்தனை உணர்ச்சி தாமரையின் முகத்தில், சுருதி மேல் இருக்கும் கோபம், கைக்கு கிடைத்த நாணயம் பறிபோனதில் உள்ள ஏமாற்றம், நம்பிய பாவ்னி செய்த துரோகம், தான் கத்தக் கூட முடியாத நிலையில் இருந்த சங்கடம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்து கமலிடம் கொட்டித் தீர்த்தார். பிறகு சுருதியிடமும் அவர் தரப்பு விவகாரங்களையும் கேட்டுக் கொண்டார் கமல். 

பிறகு பாவ்னியிடமும் பேசினார். இந்த விவகாரத்தை அவர் ஜூலி – ஓவியா விவகாரம் போல் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரம்பம் முதலே நிதானமாக, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் கமல். இதில் இருவர் மீதும் தவறில்லை என்று புரிந்துக் கொண்ட கமல். ”இது கேம் என்று மட்டுமே பார்த்தால் தவறில்லை என்பது உங்களுக்கே புரியும், கேமில் பாசத்திற்கு இடம் கொடுக்காமல், சற்று பண்போடு விளையாடுங்கள்” என்று கூறி இந்த பிரச்சனையை முடித்துவைத்தார். இருந்தாலும் கொஞ்சம் காரசாரமா கொண்டு போயிருக்கலாம் கமல் சார், சண்டை சப்புன்னு போயிடுச்சு…   

முடிந்து போன விஷயம் என்று ஆன தாமரை – சுருதியின் விவகாரத்தை பற்றி வருண், பாவ்னி, சுருதி பேச ஆரம்பிக்க சிறு பூசல் உண்டானது. ”உங்க ஓப்பினியன உங்ககிட்டயே வச்சிக்கோங்க இல்லைனா வெளியில போங்க” என்று பாவ்னி கூற, அதற்கு வருண், ”வெளியில போன்னு நீங்க சொல்லக்கூடாது நான் அப்படித்தான் சொல்லுவேன்” என்று வீம்புக்கு கத்தினார். வருண் எப்பவும் சண்டையிடுவதற்கு மட்டுமே வாய் திறக்கிறார். 

அடுத்து சர்வதிகாரி பிரச்னைக்கு வந்தார் கமல். ”சொல்லுங்க இசை”, என்று கமல் கேட்க, ”ஆமா சார்… இமான் இப்படி சொல்லிட்டாரு… நான் என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியலை சார்” என்று பவ்யமாக் கூறியது ஆச்சரியமாக இருந்தது. தினமும் புலம்பிக் கொண்டு இருந்த இசைவாணி, கமலை பார்த்ததும், தாமரை மாதிரி அவரும் உள்மன கோவங்களை எல்லாம் கொட்டிவிடுவார் என்று பார்த்தால், சிரித்துக் கொண்டே கமலிடம் பதில் கூறிக்கொண்டிந்தார், 

கமலிடம் போட்டுக்கொடுத்துவிட்டால் மறுபடியும் எப்படி இவங்களை எல்லாம்  எதிர்கொள்வது? என்று இசை பயப்படுகிறார் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.

இருந்தாலும் அண்ணாச்சியை விடக் கூடாது இல்லையா, அவருக்கும் ஒரு வார்னிங் போடணும் என்று கமலுக்கு தோன்றியது போல, அண்ணாச்சி எப்பவும் இசையிடம் ”நீ பொம்பளைப் பிள்ளை, சொன்னாக் கேட்டுக்கணும்”, என்று பேசுவதை சுட்டிக்காட்டி ”என்ன இன்னும் பழைய ஆளா இருக்கீங்க, தலைமுறை மாறிடுச்சு அண்ணாச்சி” என்று நாசூக்காக சொல்ல, இமானும் அசட்டு சிரிப்புடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

கடைசியாக இமானையும் இசையையும் காப்பாற்றப்பட்டீர்கள் என்று கூறிவிட்டு மற்றவர்களை பற்றி நாளை பார்க்கலாம் என்று விடைபெற்றார் கமல்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 2

Pamban Mu Prasanth

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி1: பிடிக்காத பழம்

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment