பிக்பாஸ் நாட்கள். நாள் 26. ‘அணி பிரிஞ்சு அடிச்சுக்காட்டு…’

SHARE

நேற்று நடந்த டாஸ்க்கில், சுவாரஸ்யம் இல்லாத நபர்களாக வருணையும் அபினய்-யையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வெளியே விடியும்வரை நெருப்பு எரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர்களை கண்காணிக்கும் காப்பாளராக இமான் நியமிக்கப்பட மூவரும் வெளியில் நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தனர். அதிகாலை  நேரத்தில் வருண் தூங்கிவிட, பிக் பாஸும் நீங்க வீட்டுக்குள்ளையே போய் தூங்குங்கடா என்று அனுப்பிவிட்டார். 

‘அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…’ பாடலுடன் தொடங்கியது நாள். கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த தாமரையும் சின்னபொண்ணுவும் கத்திக்காக அபினயிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பழம் வெட்டிக் கொண்டிருந்த அபினயிடம், ’கத்திக் கொடுப்பா’ என்று தாமரையும், சின்னப்பொண்ணுவும் கத்தி கத்திக் கேட்டதில் கோபமாக கத்தியை தூக்கிபோட்டு விட்டு சென்றார் அபினய். ’உங்களுக்கு என் கூட சண்டைப் போடணுமா’? என்று தாமரை நேரடியாக கேட்க, அதற்கு அபினய் ’இந்த வீட்ல சண்டைப் போடுற கடைசி ஆள் நானாதான் இருப்பேன்’ என்று கூறி காய்கறி வெட்டுவதற்கு உதவியும் செய்தார் அபினய். 

அடுத்து விவாத மேடைக்கு வந்தனர் ஹவுஸ்மேட்ஸ். உணவில் சிறந்தது, கிராமத்து உணவா? நகரத்து உணவா? – என்று வந்தது தலைப்பு. உடனே ஓடிவந்தார் ராஜூ, ’இந்தா எதிரணியில் இருக்கிறாரே அண்ணாச்சி, கூழை ஊத்தி ஊத்தி குடிச்சுதான் வயிறு முன்னாடி வந்திருக்கு, அன்னைக்கு தாமரை பண்ண ரசமும் உருளைக்கிழங்குகையும் பிரியங்கா நக்கி நக்கி சாப்பிட்டது, அந்த நிரூப்பு, இப்படி ஒரு முட்டைக் கீரை பொரியலை சாப்பிட்டதே இல்லைன்னு சப்புக் கொட்டி சாப்பிட்டத எல்லாம் மறந்துடவே கூடாது” என்று கிராமத்து பாணியில் கூறியது நகைச்சுவையாகவே இருந்தது. இதில் கிராமத்து அணியே வெற்றி பெற்றது.

அடுத்த விவாதம் தொடங்கியது. விளையாட்டை புரிந்து கொண்டு ஆடுவது கிராம அணியா? நகர அணியா? – என்ற தலைப்பில் வந்தது ஆப்பு. நகரத்து அணிக்காக பேசிய பிரியங்கா, ”நாங்கதான் நல்லா புரிஞ்சி கேம் விளையாடுகிறோம் என்பதற்கு உதாரணம், எங்க டீமில இருக்குறவங்ககிட்டதான் அதிக காயின் இருக்கு”ன்னு, சுருதியின் நாணயத்தையும் சேர்த்து கூற, அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்தார் தாமரை. ”விளையாட்டுன்னா விளையாட்டா ஆடணும், துரோகம் பண்ணி விளையாடக்கூடாது” என்று கோபமா கத்த, ராஜூவும் தடுக்க வந்தார், ”கமல் சார் வர வரைக்கும் பேசக்கூடாதுன்னுதான் நான் பேசாம இருக்கேன்… நீங்க ஏன் பேசுறீங்க?” என்று கத்த ஆரம்பித்துவிட்டார் தாமரை. 

அவரை தடுத்து நிறுத்திய ராஜூ, இந்த கேமில் கடைசியாக வின்னராக தேர்ந்தெடுக்கப்படும் நபரை இந்த மாதிரி காயின் பார்த்து தேர்ந்தெடுப்பதில்லை, கேரக்டர்தான் முக்கியம் என்று சூப்பரான பாயிண்டை கூறி விவாதத்தை முடித்தார். 

வர வர தாமரை ரொம்பவும் கத்திக்கொண்டே இருக்கிறார் என்பது நம்மைப் போல் ராஜூக்கும் தோன்றியது போல, தாமரையிடம் சென்று ”இப்படி வெடுக்கு வெடுக்கு பேசிக்கிட்டே இருந்தா, நீ சரியா இருந்தாலும், பார்க்கிற மக்களுக்கு தப்பாத்தான் தோணும், நகைசுவையால மக்களை ஈர்க்கப்பாரு…” என்று ராஜூ கூற உடனே தாமரை, ”நான் நாடகத்துக்கே போறேன்” என்று அனாவசியமாய் கூறியது ஆச்சர்யமாக இருந்தது. 

இருக்கும் இடத்தில் இருந்து இன்னும் பெரிய இடத்திற்கு செல்ல வாய்ப்பு வருவது என்பது பெரிய பாக்கியம், அதுவும் இந்த மாதிரி நாடக்துறையை சேர்ந்தவர்கள் சென்று சினிமாவில் ஜொலித்தால், அது மற்ற நாடகத்துறையினருக்கு நம்பிக்கை உண்டாக்கும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் தான் தனது சூழ்நிலையை கடந்தால் போதும் என்று இருக்கும் தாமரைக்கு இந்த பிக் பாஸில் இடம் கொடுத்தது சரியா? – என்று தோன்றுகிறது. 

விவாத மேடையின் முடிவில் சிறந்த போட்டியாளராக, ராஜூ மற்றும் சிபி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் அடுத்த வாரத்தலைவர் போட்டிக்கு நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்டோர் ரூமில் ஐக்கி அழுதுக் கொண்டே, ”என்னை யாரும் பெருசா எடுத்துக்க மாட்டேங்குறாங்க பிக் பாஸ்” என்று பேசிக்கொண்டிருந்தார். பிறகு பாத்ரூமிலும் அக்ஷராவிடம், ”எனக்கு வாய்ஸ் ரைஸ் பண்ணி பேசத்தெரியாது, யாராவது பேசினா நடுவுல போய் பேசத் தெரியாது” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அப்புறம் பெட்ரூமிலும், இமான் அண்ணாச்சியிடம் ”கட்டிப்பிடிப்பது பற்றி கிராமத்தில் இருப்பவர்களின் மனநிலையைத்தான் கூறினேன்” என்றும் விளக்கம் கொடுத்துக் கொண்டுருந்தார். 

பிக் பாஸ் ஸ்பான்சர்களில் ஒருவரான செஞ்சுரி மெத்தை தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஒரு டாஸ்க் அமைக்கப்பட்டது.   நீண்ட நேரம் ’ப்லான்க்’ பொசிஷனில் இருக்கும் அணியே வெற்றி பெற்ற அணி. முதுகுத்தண்டை நேராக வைத்து செய்யும் ஒரு உடற்பயிற்சிதான் பிளாங்க், இதில் ஒரு சிலர் மட்டுமே சரியான முறையில் செய்தனர். அக்ஷராவும், பாவ்னியும் சிறப்பாகவே செய்தனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 2

Pamban Mu Prasanth

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 10

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

Leave a Comment