பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

SHARE

எடுத்தவுடன் பஞ்சாயத்துடன் ஆரம்பமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீட்டுக்கு ஒரு தலைவர் இருந்து எல்லா வேலைகளுக்கும், ஆட்களை பிரித்து, எல்லாம் சரிபார்ப்பதுதான் வாராவாரம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களின் வேலை. இதில் இந்த வாரத்தில் நாணயம் வைத்திருப்பவருக்கும் அதே அளவு பவர் கிடைத்துள்ளதால், யார் யார் எதற்கு அதிகாரம் செலுத்துவது, யார் சொல்வதை யார் கேட்பது, யார் சொல்லும் சொல்லுக்கு முன்னுரிமைக் கொடுப்பது என்று புரியாமல் விழிக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸும், தலைவர்களும். 

மதுமிதா மற்றும் இசைவாணி, இருவரும் முதல் முறையாக தலைமை ஏற்பதால், எப்படி தலைமை வகிப்பது என்கிற பயம், தலைமைப் பொறுப்புடன் நடந்துக்கொண்டால் ஏற்படும் சங்கடங்கள் என்று சற்று தயக்கமும் சூழ சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமப்படுகின்றனர் இருவரும். ஏற்கனவே  பிக் பாஸால் எச்சரிக்கை செய்யப்பட்டதால் இசைவாணி கவனமாகவும், அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று பார்த்து பார்த்தும் நடந்துக்கொண்டார். 

இதில் வாரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுமிதா, ஏற்கனவே உள்ள மொழிப் பிரச்னையால் இருக்கும் சிக்கல், தன்னை யாரும் தலைவராக பார்ப்பதில்லை என்ற வருத்தம், தலைவர் பதவிக்கு தான் தகுதி இல்லையோ என்ற குற்ற உணர்ச்சி இவற்றால் தந்தளித்துக்கொண்டிருந்தார். 

’சரி வாங்க பேசி தீர்த்துக்கொள்ளலாம்’ என்று கூடியது கூட்டம். ஆனால் எதற்காக கூடியதோ அதை தவிர மற்ற அனைத்தும் பேசப்பட்டது. இசை தன் வாதமாக, ’பிக் பாஸ் என்ன சொன்னாரோ, எந்த எந்த வேலைகளை செய்யலாம் என்று கூறினாரோ அதைத்தான் செய்கிறேன்’ என்று கூறினார். ’அப்போ எனக்கு என்ன பவர் இருக்கு, நான் என்ன செய்யனும்’ என்று கேட்டார் மதுமிதா. ’நீயும் தலைவராக என்னலாம் செய்யணுமோ செய்யலாம்’ என்று இசை கூற, ’நான் சொல்வதை யாரும் செய்வதில்லையே’ என்று அப்பாவியாய் கூறினார் மதுமிதா. 

ஆனால் கடைசியா இந்த கூட்டத்தில் இசைக்கு கிடைத்த பெயர் ’சர்வதிகாரி’. நிஜமாவே இமான் நிதானத்தில்தான் இருக்கிறாரா என்று தெரியவில்லை, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் இசையின் நடவடிக்கையை பார்த்து ’நீங்க நடந்துக்குறதை எல்லாம் பார்க்கும்போது ஒரு சர்வதிகாரி மாதிரி இருக்கு’ன்னு அவர் சொன்னது உண்மையே இல்லை. 

இசை ஒவ்வொருவரிடமும் பார்த்து பார்த்து தான் வேலை வாங்கினார். யாரிடமும் கடுமையாக பேசி வேலை வாங்கியதாகவோ வேலை செய்யாதவர்களுக்கு தண்டனைக் கொடுத்ததாகவோ தெரியவே இல்லை. இதில் பெரிய அதிர்ச்சி, இமானின் இந்த பேச்சுக்கு வீட்டில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் எந்த ஆட்சேபமும் கூறவில்லை என்பது.  

இது மட்டுமில்லாமல், ’உனக்கு காயின் எப்படி வந்ததுன்னு தெரியுமா?’ என்று இசையிடம் இமான் கேட்டது தவறான கேள்வி. நான் போட்ட பிச்சையில தான் உயிர்  வாழுற என்கிற தொனியில், ’உனக்கு காயின் கொடுத்ததே நான் தான்’ என்று இமான் கூறியது சரியில்லை… இமானிடன் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. 

ஹவுஸ்மேட்ஸை சற்று சிரிக்கவும் சந்திக்கவும் வைக்கலாம் என்று பிக் பாஸ் நினைத்தார் போல, விவாத மேடை  எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கிராம அணி ஒரு புறமும், நகர அணி ஒரு புறமும் கொடுக்கப்படும் தமைப்பில், இதுவரை வீட்டில் நடந்த சூழலைக் கொண்டு விவாதிக்கும்படிகூறப்பட்டது. 

ராஜூ மையமாகப் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். இதில் தாமரையின் பேச்சு உள்நோக்கத்துடனேயே இருந்தது வெளிப்படையாகத் தென்பட்டது. 

சுருதியை பார்த்து ’நீ உடை உடுத்தும் முறை சரியில்லை’ என்று கூறினார் தாமரை. இதற்கு சுருதி புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார். சுருதியின் இந்த போக்கு பாராட்டக்கூடியது. இதேபோல் சுருதி பல விஷயங்களில் தனிப்பட்டுத் தெரிகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது ’அந்த சின்னப்பொண்ணுக்கு இருக்குற பொறுமை உங்களுக்கு இல்லையே…’ என்று தாமரையை பார்த்து கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. 

விவாத மேடை இறுதியில் ’அடக்கம் என்றால் என்ன?’ என்று சின்ன சச்சரவு ஏற்பட்டது தாமரைக்கும் சிபிக்கும். ’அடக்கம் என்றாலே அது கிராமத்து ஆட்கள் தான்’ என்று கூறிய தாமரைக்கு, ’முதல்ல நீங்க அடக்கமா இருக்கீங்களான்னு பாருங்க’ என்று சிபி கூறியது சிறப்பான பதிலடி.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

”இறுதி வார்த்தை…” மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் – 05.

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Pamban Mu Prasanth

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Pamban Mu Prasanth

”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

Leave a Comment