- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: சே.கஸ்தூரிபாய்
எடுத்தவுடன் பஞ்சாயத்துடன் ஆரம்பமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீட்டுக்கு ஒரு தலைவர் இருந்து எல்லா வேலைகளுக்கும், ஆட்களை பிரித்து, எல்லாம் சரிபார்ப்பதுதான் வாராவாரம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களின் வேலை. இதில் இந்த வாரத்தில் நாணயம் வைத்திருப்பவருக்கும் அதே அளவு பவர் கிடைத்துள்ளதால், யார் யார் எதற்கு அதிகாரம் செலுத்துவது, யார் சொல்வதை யார் கேட்பது, யார் சொல்லும் சொல்லுக்கு முன்னுரிமைக் கொடுப்பது என்று புரியாமல் விழிக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸும், தலைவர்களும். மதுமிதா மற்றும் இசைவாணி, இருவரும் முதல் முறையாக தலைமை ஏற்பதால், எப்படி தலைமை வகிப்பது என்கிற பயம், தலைமைப் பொறுப்புடன் நடந்துக்கொண்டால் ஏற்படும் சங்கடங்கள் என்று சற்று தயக்கமும் சூழ சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமப்படுகின்றனர் இருவரும். ஏற்கனவே பிக் பாஸால் எச்சரிக்கை செய்யப்பட்டதால் இசைவாணி கவனமாகவும், அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று பார்த்து பார்த்தும் நடந்துக்கொண்டார். இதில் வாரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுமிதா, ஏற்கனவே உள்ள மொழிப் பிரச்னையால் இருக்கும் சிக்கல், தன்னை…
‘ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க…’ பாடலுடன் தொடங்கியது நாள். நெருப்பு வாரம் என்று தொடர்ந்து மூன்று நாள் நெருப்பு சம்பந்தப்பட்ட பாடல் போட்ட பிக் பாஸ், அன்று இந்தப் பாட்டை ஏன் போட்டார் என்றே தெரியவில்லை… காலையில் காபி குடிக்க ராஜூ, சிபி கிச்சனில் நுழைய, ’காயின் இல்லாம எப்படி கிச்சனுக்கு வந்தீங்க?’ என்று கேட்டு, ’நான் காயின் வெச்சதுக்கு அப்புறம்தான் சமைக்கணும்’ என்று திட்டமாக கூறினார் இசைவாணி. ஊருவிட்டு ஊருவந்து டாஸ்க்கில் (புரிஞ்சிட்டு…), அனைவரும் கிராம, நகர கெட்டப்பில் கிளம்பி தயாராகினர். இதில் சுருதி மற்றும் பாவ்னி எதிலும் ஒட்டாமலே இருந்தனர். பிக் பாஸிடம் கேட்டும் எந்த பதிலும் வராததால், எப்படி நடந்துக் கொள்வது என்று புரியாமல் இருந்தனர் பாவ்னியும், சுருதியும். ’காயினை பார்த்தால் வெறுப்பாக உள்ளது’ என்று வாழ்க்கையே வெறுப்பது போல் புலம்பிக் கொண்டிருந்தார் சுருதி. ஏன் பிக் பாஸ், அந்த பொண்ண கூப்பிட்டு…
”ஓடியா ஓடியா ஓடியா… பிக் பாஸ்ல சண்டையாம்ல, ஓடியா ஓடியா…” என்று நேற்றைய ப்ரோமோவைப் பார்த்து எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்… அப்படி என்னதாண்டா நடந்தது என்று வாங்க பார்ப்போம்… ’நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்’ என்ற கபாலி பாடலுடன் தொடங்கியது நாள். பாத்ரூமில் குளித்துவிட்டு உடை மாற்றும் அறையில் இருந்த தாமரை, உடைகளை மாற்றிக் கொண்டிருக்க, சுருதியும், பாவ்னியும், காயின் எடுக்க முயற்சி செய்தனர். ’நீ அவங்களை திசை திருப்பி விடு, நான் எடுத்திடுறேன்’ என்று கூறினார் சுருதி, பாவ்னியும் ’சரி’ என்று கூற, இசைவாணிக்காக உடை எடுக்கப்போகும் போது, பாவ்னி டவலால் தாமரையை மறைக்க, சுருதி தாமரையின் நாணயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். பிறகு பாவ்னியும் வெளியே வந்துவிட்டார். வெளியே வந்த சுருதி, நாணயத்தை கேமரா முன் காண்பித்து தனக்கு உரிமையாக்கிக் கொண்டார். அவசரமாக உடை அணிந்து வெளியே வந்த தாமரை, சுருதியை தேடி, ’ஏன் எடுத்த’, ’நீ கேட்டிருந்தா…
துபாய்: சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்துவிட்டது ஐபிஎல். அதில் மீண்டும் புது தெம்புடன் புது வேகத்துடன் வந்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் 2021 போட்டியோட இரண்டாம் பாகமா நேற்றைக்கு துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். ரொம்ப நாளைக்கு பிறகு ஐபிஎல் போட்டி, அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மாதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் போட்டி. சென்னை மக்களுக்கு சொல்லவே வேண்டாம் விசிலோட தயாராகிட்டாங்க. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, ரசிகர்களும் அதையேத்தான் எதிர்ப்பார்த்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் இல்லை அவருக்கு பதில் ப்ராவோ மற்றும் ஹசில்வுட் இணைந்திருந்தார்கள். மும்பை இண்டியன்ஸ் அணியில் முக்கியமான இரண்டு வீரர்கள் இல்லை ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக்…
ஐபிஎல் லீக்கின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெல்லி டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக கூறியது. இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தாஹிர், ப்ராவோவுக்கு மாற்றாக மொயின் அலி மற்றும் எங்கிடியையும், சன்ரைசர்ஸ் அணியில், அபிஷேக் ஷர்மா, விராத் சிங் பதிலாக மணீஷ் பாண்டே மற்றும் சந்தீப் ஷர்மாவை களம் இறக்குவதாக தெரிவித்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ. வந்த வேகத்திலேயே சாம் கர்ரனின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பேர்ஸ்டோ. அடுத்து மணீஷ் பாண்டே களம் இறங்கினார். வார்னர் மற்றும் பாண்டேவின் கூட்டணி மெல்ல மெல்ல ரன்களை குவிக்க ஆரம்பித்தது. பவர்பிளே முடிவில் 39 ரன்கள்…
ஐபிஎல் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அகமதாபாத் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் ஃபீல்டிங் செய்வதாக கூறினர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அஷ்வினுக்கு மாற்றாக இஷாந்த் ஷர்மாவும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சைனிக்கு மாற்றாக ரஜத் பட்டிதாரும் என இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும், படிக்கல்லும் களம் இறங்கினர். வந்ததுமே வேகம் காண்பித்தார்கள் இருவரும். இஷாந்த்தின் ஓவரில் 2 பவுண்டரி, அடுத்து ரபாடா ஓவரில் 2 பவுண்டரி, ஆவேஷ் கான் ஓவரில் ஒரு பவுண்டரி என சூப்பராக ஆரம்பித்தார்கள். ஆரம்பித்ததை பார்த்தால் எப்படியும் இவர்கள் இருவர்…
ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அகமதாபாத் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தது. கொல்கத்தா அணியினர் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் களம் இறங்கினர். பஞ்சாப் அணியில் மட்டும், ஆலனுக்கு மாற்றாக கிறிஸ் ஜோர்டன் களம் இறங்கினார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் அகர்வால் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அடித்து ஆடவேண்டும் என்று கம்மின்ஸின் முதல் ஓவரிலேயே தெர்டு மேன் பக்கம் ஒரு சிக்ஸர், கீப்பர் பின்னாடி ஒரு பவுண்டரி என்று அடிக்க ஆரம்பித்தனர். அடுத்து மாவியின் பந்துக்கும் மிட் ஆஃப் ஏரியாவில் ஒரு பவுண்டரி. அடுத்து நரைனின் பந்துக்கும் ஒரு பவுண்டரி என்று நன்றாகவே விளையாடினார்கள். பின்னர் எப்படியாவது விக்கெட் எடுத்தாக வேண்டும் என்று…
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வான்கடே, மும்பை டாஸ் வென்ற தோனி, பேட்டிங் செய்வதாகஅறிவித்தார். தோனியும், கோலியும் இந்த ஆட்டத்துக்கு மாற்றங்களோடுதான் வந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மொயின் அலி, எங்கிடிக்கு பதிலாக ப்ராவோ மற்றும் தாஹிர் களம் இறங்குவதாகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், ரிச்சர்ட்சன், ஷாபஸ்க்கு பதிலாக கிறிஸ்டியன் மற்றும் சைனி களம் இறங்குவதாகவும் கூறினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பான ஆரம்பத்துடன் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸி நன்றாகவே அடித்தார்கள். முதல் ஓவரிலேயே சிராஜின் பந்தில், வைடு ஆஃப் கவர் ஏரியாவில் கேப் பார்த்து ஒரு பவுண்டரி, சிராஜின் அடுத்த ஓவரிலும்…
ஐபிஎல் லீக் போட்டி நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வான்கடே, மும்பை டாஸ் வென்ற சஞ்சு சாம்சன், ஃபீல்டிங் செய்வதாகவும், இரண்டு மாற்றங்கள் உடன் இன்று களம் இறங்குவதாகவும் கூறினார். ஷ்ரெயாஸ் கோபாலுக்கு மாற்றாக உனத்கட்டும், மனன் வோராவுக்கு மாற்றாக ஜெய்ஸ்வாலும் அன்று விளையாட உள்ளதாக கூறினார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர் ராணா மற்றும் கில். முதல் ஓவரில் 3 ரன்கள், 2வது ஓவரில் 5 ரன்கள், 3 வது ஓவரில் உனத்கட்டின் பந்தில், தெர்டு மேன் பக்கம் சென்ற பவுண்டரி. அதனால் அந்த ஓவரில் 6 ரன்கள், 4 ஓவரில் முஸ்தாபிஃசுரின் பந்தில் மிட் விக்கெட்டில் பவுண்டரி,. அதில் 7 ரன்கள். 5வது ஓவரில் 2 ரன்கள். 6 ஓவரில்…
ஐபிஎல் டி20 போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்கடித்து தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. மும்பை: மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் டி20 லீக் போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதுதான் இந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்ற முதல் வெற்றி. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பவுளலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் தன்னுடைய பவர் பிளே சுற்றிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மட்டுமே நன்றாக ஆடி 31 பந்துகளுக்கு 51 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 147 ரன்கள் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ். அடுத்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்…