பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

SHARE

”ஓடியா ஓடியா ஓடியா… பிக் பாஸ்ல சண்டையாம்ல, ஓடியா ஓடியா…” என்று நேற்றைய ப்ரோமோவைப் பார்த்து எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்… அப்படி என்னதாண்டா நடந்தது என்று வாங்க பார்ப்போம்…

’நெருப்புடா  நெருங்குடா பார்ப்போம்’ என்ற கபாலி பாடலுடன் தொடங்கியது நாள். பாத்ரூமில் குளித்துவிட்டு உடை மாற்றும் அறையில் இருந்த தாமரை, உடைகளை மாற்றிக் கொண்டிருக்க, சுருதியும், பாவ்னியும், காயின் எடுக்க முயற்சி செய்தனர். 

’நீ அவங்களை திசை திருப்பி விடு, நான் எடுத்திடுறேன்’ என்று கூறினார் சுருதி, பாவ்னியும் ’சரி’ என்று கூற, இசைவாணிக்காக உடை எடுக்கப்போகும் போது, பாவ்னி டவலால் தாமரையை மறைக்க, சுருதி தாமரையின் நாணயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.  பிறகு பாவ்னியும் வெளியே வந்துவிட்டார். வெளியே வந்த சுருதி, நாணயத்தை கேமரா முன் காண்பித்து தனக்கு உரிமையாக்கிக் கொண்டார். 

அவசரமாக உடை அணிந்து வெளியே வந்த தாமரை, சுருதியை தேடி, ’ஏன் எடுத்த’, ’நீ கேட்டிருந்தா நானே குடுத்திருப்பேன்’, ’இது எவ்ளோ பெரிய துரோகம் தெரியுமா?’ என்று சரமாரியாக சுருதியையும் பாவ்னியையும் விளாசித் தள்ளினார்.. 

இதனால் சுருதி, பாவ்னியின் முகமே இறுகிப் போனது. இந்த மாதிரி தாமரை பேசுவார் என்று, சுருதி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிகிறது. சுருதியும் ’தேவையில்லாத வார்த்தைகளை பேசாதீங்க’ என்று தாமரையை தடுக்க முயற்சித்தார். ’நாணயத்தை எப்பவும் உடம்புடனேயே வைத்திருந்தால் எப்பதான் எடுப்பது?’ என்பது சுருதியின் வாதம். ’அதுக்காக நான் இந்த நிலைமையில இருக்கும் போது எடுக்கலாமா’?… உன்ன நம்பினதுனாலதானே நான் உன்ன உள்ளேவிட்டேன்’? என்று எதிர் வாதம் செய்தார் தாமரை. 

உடனே தாமரை வீட்டில் தனக்கு சப்போர்ட் செய்யும் ஆட்களிடம் சென்று புகார் கூற… ராஜூ, சிபி, வருண், இமான் எல்லாம் பாத்ரூமிற்கு படை எடுத்தனர். ’நாங்கதான தாமரைக்கு காயின் எடுத்துக் குடுத்தோம், அத நீங்க எடுக்கலாமா’? என்று கேட்டார் ராஜூ. 

‘இது என்ன கேள்வின்னே புரியலையே… அவங்களுக்கு எடுத்துக் குடுத்த காயின்றதுனால அவங்கள தவிர வேற யாரும் எடுக்க கூடாதுங்குறாங்களா?’ என்றார் சுருதி. 

இத விட முக்கியமா ஒரு கேள்வி கேட்டாருப் பாருங்க ராஜூ, ’இதே மாதிரி நீங்க டிரெஸ் மாத்தும் போது நாங்க எடுக்கலாமா’ என்று அவர் கேட்டது. ஒரு கதாசிரியரே இப்படி இங்கிதம் இல்லாமல் கேக்கலாமா? – என்று இருந்தது. 

இந்த மாதிரி கேள்விகளை கண்டு சுருதி தடுமாறினாரே தவிர, பாவ்னி தைரியமாகவே இருந்தார், ’இவங்களுக்கு எதுக்கு விளக்கம் சொல்லணும்..? கமல் சார்கிட்ட சொல்லிக்கலாம்’ என்று சுருதியையும் ஆறுதல்படுத்தினார்.  

தொடர்ந்து மற்ற ஹவுஸ்மேட்ஸும் தாமரைக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்க, ’இது ஒரு கேம் தானே, இதுக்கு ஏன் அழுவுற’ என்று ராஜூ கேட்க, ’இதுவா கேமு… நான் எப்படி இருந்தன்னு தெரியுமா உனக்கு… இந்த மாதிரியா விளையாடுவாங்க?… இந்த மாதிரி விளையாட்டு எனக்கு வேண்டாம். என்னைய விட்ருங்க நான் வீட்டுக்குப் போறேன்’ என்று கத்த ஆரம்பித்து விட்டார் தாமரை. 

’விளையாட்டுன்னா இப்படித்தான்’ – என்று ராஜூ கூற, ’நம்பிக்கை வெச்சிருந்தனே, உங்களை எல்லாம் நம்பினேனே…’ என்று தாமரை சொல்ல, ’நம்பிக்கையும் வைக்குற… நாமினேட்டும் பண்ணுற’ என்று ராஜூ கூறியது நல்ல டைமிங். 

இது கேம் என்று எல்லாருக்கும் புரிந்தாலும், அதை தாமரைக்கு புரிய வைக்கவே முடியவில்லை, தாமரை ஓவர் ரியாக்ஷனில் ஹவுஸ்மேட்ஸ் தடுமாறத் தொடங்கினர்.  அதற்குமேல் தாமரை, தன்னோட நிலையைக் கூறி, ’இந்த நிலைமையிலும் என்னிடம் காசை எடுப்பது எப்படி கேம்மாகும்..?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்.

தாமரை உணர்ச்சிகளுக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கிறாரே தவிர மற்றவர்கள் சொல்லுவதை கேட்கும் நிலையிலே இல்லை.

இதைவிட, ’நான் சொல்லுறதையும் ஒரு நிமிஷம் கேளுங்க, அப்பதான் என் பக்கம் உள்ள விஷயமும் இங்களுக்கு புரியும்’ என்று கூற வந்த சுருதியிடமும் வீம்பாக பேசாமல் போவது, ’உன் மேல ரொம்ப கோவத்துல இருக்கேன்… என்கிட்ட பேசாத போயிடு’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்தது. 

தாமரையின் பக்கம் சரிவதா.. இல்லை சுருதியின் பக்கம் நிற்பதா என்று ஹவுஸ்மேட்ஸ் புரியாமல் விழித்தனர். இதில் உங்களுக்கு ஒன்று நினைவு வருகிறதா… அக்ஷரா சின்னபொண்ணுவிடம் ’நீங்க காயின் எதும் எடுக்க ட்ரை பண்ணலையா’ என்று கேட்டபோது, சின்னப்பொண்ணு ’நான் எடுக்குறதா இருந்தா தாமரையோட காயின எடுத்துடுவேன், ஆனா அது ஒப்பாரி வைக்கும்’ என்று கூறினார். ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் தாமரையின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என்று ஓரளவுக்குத் தெரியும், பாவம் சுருதிக்கு தெரியவில்லை. 

இந்த பிரச்சனையில் வீட்டின் தலைவர் மதுமிதா, தாமரையிடம் சரியான கேள்வி கேட்டார்,  ’அவ காயின் எடுக்கும் போது நீங்க பாத்தீங்க அப்படின்னா ஏன் கத்தல’ என்று, அதற்கு தாமரை ’நான் கத்தினா ஆம்பளை பசங்க உடனே என்னவோ ஏதோன்னு உள்ளவந்துடுவாங்க… அதான் கத்தல’ என்று கூறினார். தாமரை சொன்ன லாஜிக் சரி என்றாலும், மற்ற பெண்கள் அப்படி விட்டுவிடுவார்களா என்ன…? 

தாமரை சொல்வது போல் அவர் கத்தியிருந்தால், ஆண்களை விட பெண்கள்தான் முதலில் ஓடி வந்திருப்பார்கள் அல்லவா? இந்த இங்கிதம் கூட பெண்களுக்கு தெரியாதா என்ன? ஒரு பெண் கத்தினால் முதலில் இன்னொரு பெண் தானே ஓடி வந்து பார்ப்பார், ஆணே கூட ’என்னாச்சி பாருங்க’ என்று பெண்ணைத்தானே முதலில் அனுப்புவான்?…

இவ்ளோ பிரச்னையிலும், சுருதி அந்த காயினை ’இந்தா, நீயும் உன் காயினும்…’ என்று திருப்பிக் கொடுக்காமல் இருந்தது, அவர் இதை விளையாட்டாக மட்டும்தான் பார்த்தார் என்பதைக் காட்டியது.  ஒரு கட்டத்தில் வீடே இந்த பிரச்னைக்கு பிக் பாஸ் தான் தீர்வு சொல்லணும் என்று விட்டுவிட… பிக் பாஸும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுத்து வீட்டின் சூழலை திசை மாற்றினார். 

இடையில் இசைவாணி ’நம்மளை கேக்காமலே கிச்சன்ல எல்லாதையும் எடுக்குறாங்களே, வேணும்னே பண்றாங்களா?’ என்று யோசித்து, ’நாளைக்கு கூட்டத்தை கூட்டிட வேண்டியதுதான்’ என்ற யோசனையுடன் தூங்கச் சென்றார். வீட்ல என்ன பிரச்சனை நடந்தாலும் பரவாயில்லை என் பிரச்சனை எனக்கு என்று இருந்தார் இசைவாணி…

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

மோடி ஆட்சிக்கு ஒரு கோடி கும்பிடு… வைரலாகும் புகைப்படங்கள்…

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

Leave a Comment