விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

SHARE

நாம் பயணிக்கும் போது கையில் கொண்டு போகும் பொருட்களை மறந்து விட்டு வருவது இயல்புதான். அப்படி தொலைத்த பொருளை மீட்க ஒருவர் செய்த செயல்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.             

நந்தன் குமார் என்ற கணினிப் பொறியாளர் இண்டிகோ விமனத்தில் பயணம் செய்யும் போது அவர் கையில் ஒரு பெட்டியைக் கொண்டு சென்று உள்ளார். அங்கு அதே மாதிரியான பெட்டியை வேறு ஒரு பயணியும் கொண்டு வந்ததை அவர் பார்க்கிறார்.  எதிர்பாரத விதமாக அந்த இந்னொரு பயணி இவரது பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். உடனே பதற்றமடைந்த  நந்தன்குமார்   இண்டிகோ விமான அலுவகத்தில் புகார் கொடுத்து, தனது பையிள் மேலே ஒட்டப்பட்டுள்ள பி.என்.ஆர் எண்னை அதிகாரியிடம் சொல்லி, பெட்டியை விரைவாகக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டார். ஆனால் அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டார்கள்.

இதனால் கோவமும் வெறுப்பும் அடைந்த  அந்த நந்தன் குமார் ‘எனது பெட்டியை நானே கண்டுபிடித்து கொள்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டு, தனது பெட்டியைக் கொண்டு சென்றவரின் விவரங்களை தெரிந்து கொள்ள இண்டிகோ இணையத்திற்குச் சென்று அதனை ஹேக் செய்தார்.  பின்னர் இது குறித்து டுவிட்டரில் எழுதிய அவர்,”எனக்கு தெரிந்த எல்லா டிவைஸ் ட்ரிக்ஸ்களையும் செய்து எஃப்12 பட்டனை அழுத்தினேன். எல்லா பயணிகளின் விவரங்களும் வந்தன”என்று அதில் விளக்கினார். 

பயணி ஒருவர் விமான நிறுவன இணையதளத்தை ஹேக் செய்தது அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்கு ஊள்ளாக்கியது. அதிகாரிகள் ”நீங்கள் இண்டிகோ இணையதளத்திற்குச் சென்றாலேயே உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைத்து விடுமே, ஏன் ஹேக் செய்தீர்கள்?” என நந்தன் குமாரைக் கண்டித்தனர். இன்னொரு பக்கம் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால்தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என இணையவாசிகள் அதிகாரிகள் மீதும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

அப்பாவை வேலை பார்க்க விடாத சுட்டிக் குழந்தை – இணையத்தில் வைரலாகும் காணொலி!.

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

‘ஏ..தள்ளு..தள்ளு’ – பழுதான ரயிலை தள்ளிக்கொண்டு சென்ற மக்கள்

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

Leave a Comment