சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

SHARE

ஐபிஎல் லீக்கின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டெல்லி

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக கூறியது. இரண்டு அணிகளும் மாற்றங்களுடன் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தாஹிர், ப்ராவோவுக்கு மாற்றாக மொயின் அலி மற்றும் எங்கிடியையும், சன்ரைசர்ஸ் அணியில், அபிஷேக் ஷர்மா, விராத் சிங் பதிலாக மணீஷ் பாண்டே மற்றும் சந்தீப் ஷர்மாவை களம் இறக்குவதாக தெரிவித்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ. வந்த வேகத்திலேயே சாம் கர்ரனின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பேர்ஸ்டோ. அடுத்து மணீஷ் பாண்டே களம் இறங்கினார். வார்னர் மற்றும் பாண்டேவின் கூட்டணி மெல்ல மெல்ல ரன்களை குவிக்க ஆரம்பித்தது. பவர்பிளே முடிவில் 39 ரன்கள் எடுத்திருந்தது. வார்னரின் ஆட்டத்தில் பவரே இல்லாமல் ஆடியது போல் இருந்தது, பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை கூட அடிக்கவில்லை. 15ஆவது ஓவரில் தான் ஒரு சிக்ஸர் அடித்து, ஐபிஎல்லி தன்னுடைய 10000 ரன்களை கடந்தார் வார்னர். அடுத்து ஜடேஜாவின் பந்தில் மீண்டும் 1 சிக்ஸர் அடித்து, ஐபிஎல்லில் தன்னுடைய 50 வது அரை சதத்தையும் கடந்தார் வார்னர். கூட்டணி சேர்ந்த பாண்டேவும் 35 பந்தில் தன்னுடைய அரை சதத்தை எடுத்தார்.

இறுதியில் இந்த கூட்டணி, எங்கிடியின் பந்தில் உடைந்தது. 18ஆவது ஓவரில் வந்த எங்கிடி, முதல் பந்தில் வார்னரின் விக்கெட்டையும், கடைசி பந்தில் பாண்டேவின் விக்கெட்டையும் எடுத்தார். அடுத்து ஜாதவ் மற்றும் வில்லியம்சன் ஆடினர். வில்லியம்சனை ஏன் முதலிலேயே ஆட அனுப்பவில்லை என்று கேட்க வைத்தது அவரது ஆட்டம். 19 வது ஓவரில், 3 பவுண்டரி 1 சிக்ஸர் என 19 ரன்களை எடுத்து அசத்தினார். வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களை எடுத்து நாட் அவுட்டில் இருந்தார். கடைசி ஓவரில், ஜாதவ், 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என அடிக்க, ஆட்டத்தை 171 ரன்களுடன் முடித்தது ஹைதராபாத அணி. 

அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸி. ஆரம்பம் முதலே அடித்து ஆடி பவர்பிளே ஓவர்களின் முடிவில் 50 ரன்களை கடந்தது சென்னை அணி. கெய்க்வாட் மற்றும் டூப்ளஸி ஃபார்ட்னர்ஷிப்பில் 129 ரன்களை எடுத்தது சென்னை அணி. யார் பந்து வீசுகிறார்கள் என்று பார்க்காமலேயே ஆடினர் இருவரும், எல்லா பந்தும் ஒரே மாதிரியே இருந்தா என்ன பண்றது? – என்று தான் இருந்தது சென்னை அணிக்கு. ஓவருக்கு 2,3 பவுண்டரி என அடித்து ஆடினர். சன்ரைசர்ஸ் அணியால் விக்கெட் எடுக்கவே முடியவில்லை, 13ஆவது ஓவரில், ரஷித்தின் பந்தில், 2 பவுண்டரிகளை அடித்து, கடைசி பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார் கெய்க்வாட். அவர் சிறப்பாக 75 ரன்கள் எடுத்ததால் ஆட்ட நாயகன் ஆனார். 

அடுத்து மொயின் அலி மற்றும் டூப்ளஸியின் விக்கெட்டுகளையும் எடுத்தார் ரஷித், என்ன பிரயோஜனம், ஆட்டம் எப்போதோ சிஎஸ்கேவிடம் சென்று விட்டதே என தோன்றியது ரசிகர்களுக்கு. டுப்ளஸியின் விக்கெட்டில் 150 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. அடுத்து ஜடேஜாவும், ரெய்னாவும் களம் இறங்கினர். 18ஆவது ஓவரில், மிட் ஆனில் 1 பவுண்டரி, டீப் ஸ்கெயர் ஏரியாவில் 1 பவுண்டரி என அடித்துத் தள்ளினார் ரெய்னா. 19ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் கவர் திசையில் 1 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

Leave a Comment