பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

SHARE

வாராவாரம் யார் எலிமினேட் ஆகுவார் என்று முன்னாடியே தெரியுற மாதிரி இந்த வாரமும் ஞாயிறு காலையிலேயே சின்னபொண்ணுதான் எலிமினேட்டுன்னு தகவல் கசிய ஆரம்பித்தது. இது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான், இந்த மாதிரி சில விளையாட்டுக்கு பொருந்தாதவர்களை எல்லாம் எப்படியும் சீக்கிரம் ஓரங்கட்டிடுவாங்க அப்படிங்குறது, ஆனாலும் பிக் பாஸில் இந்த மாதிரி ஆட்களை ஏன் செலக்ட் பண்றாங்கன்னு புரியல… 

அகம் டிவி வழியாக வந்த கமல், கன்பெஷன் ரூமில் ஹவுஸ்மேட்ஸ் உபயோகிக்கும் வார்த்தைகளை வைத்து அவர்களுக்கே ரிவீட் அடிப்பது போல் டாஸ்க் கொடுத்தார்.  FAKE, ESCAPE FROM WORK, PARTIALITY, BIASED, CONFUSED, NOT UNDERSTANDING THE GAME, HURTING OTHERS – என்று இருந்த பேட்சுகளை காட்டி, யார் யார் எந்தெந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு என்ன பெயர் கொடுப்பீர்கள்? – என்று ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னார். இதில் அதிக பேட்சுகள், கிட்டதட்ட எல்லா பேட்சும் அக்ஷராவுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதை ஆரம்பித்ததும் பிரியங்கா தான். கிட்டதட்ட எல்லாரும்  சப்புக்கட்டு காரணங்களாகாவே கூறினர். 

ராஜூ இமானுக்கு, யாரும் கிடைக்கலைன்னு கொடுக்குறேன்னு சொல்லிக் கொடுத்தது, தாமரை காயின் பிரச்னையை வைத்து பாவ்னிக்கு கொடுத்தது என்று காரணங்கள் எல்லாம் அல்ப்பமாகவே இருந்தன. இதில் சிபி தனித்து நிற்கிறார், அவர் வருணுக்கு சொன்ன காரணம், ”காணாமப் போயிடுவோமோன்னு நினைச்சு சில விஷயங்களை செய்கிறார்”. அவர் கூறியது சரியான கணிப்பு.   

அடுத்து எவிக்ஷன் ப்ராஸஸ்க்கு வந்தனர். மீதம் இருந்த நாமினேட் ஆன 7 பேரை ஆக்விட்க்கி ஏரியாவுக்கு செல்லச் சொன்னார் கமல். அங்கிருந்து முதலில் பிரியங்கா, அடுத்து அக்ஷரா, பாவ்னி, சுருதி, என்று ஒவ்வொருவராய் காப்பாற்றி வெளியே அனுப்பி வைத்தார். இறுதியில் அபினய், வருண், சின்னபொண்ணு இருக்க, ”உங்க மூன்று பேரிடமும் தனியாக பேசத்தான் எவிக்ஷன் இங்க நடக்குது” என்று கூறி, ”நீங்கள் மூவரும் இன்னும் காணாமல் போனவர்களாகவே தென்படுகிறீர்கள்” என்று எச்சரித்து சின்னபொண்ணு பெயர் இருக்கும் கார்டை காட்டினார் கமல்.  அபினய் மற்றும் வருண் அப்பாடா! என்று வெளியே வந்தனர். கடைசியாக சின்னபொண்ணுவும் வெளியே வந்து அனைவரிடமும் விடை பெற்று சென்றார். 

கிளம்பும் போது அவர் பாடிய ”காட்டுக் சிறுக்கி” பாடலை அற்புதமாகவே பாடினார். அடுத்த சடங்காக, புத்தக பரிந்துரைக்கு வந்தார் கமல், ’தென்றல் வெண்பா ஆயிரம்’ என்னும் புத்தகத்தை பரிந்துரை செய்தார். கவியரசு கண்ணதாசன் தென்றல் என்ற இதழிற்காக நடந்த வெண்பா போட்டியில் கிடைத்த வெண்பாக்களை கோர்த்த தொகுப்புதான் இந்தப் புத்தகம். வெளியே வந்த சின்னப்பொண்ணுவிற்கு, அவரை பற்றிய குறும்படத்தை காட்டி வழியனுப்பி வைத்தார் கமல்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

பிக்பாஸ் நாட்கள். நாள் 13: ”காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு…”

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment