வேர்ச்சொற் கட்டுரைகள் – நூல் அறிமுகம்…

SHARE

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் வேர்ச்சொல்லை ஆய்வு செய்து அதன் பொருள்களையும், சான்றுகளையும் சிறப்பாக தமிழ் உலகுக்கு கொடுத்துள்ளார் தேவநேயப் பாவாணர் அவர்கள்.

மூன்று மாதமாக ஒவ்வொரு பக்கமாக நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்து வந்தேன். சில நாட்களுக்கு முன்பு படித்து முடித்தேன். வேர்ச்சொல் என்றால் என்ன? ஒரு சொல் எப்படி திரிபடையும்? மற்ற மொழிகளில் எப்படி திரிபடைந்துள்ளது? வட்டார சொற்கள் என்னென்ன உள்ளது? ஒரு சொல் இலக்கியங்களில் எப்படி வழங்கப்பட்டுள்ளது? ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உள்ளது?  என பல கோணங்களில் ஆய்வு செய்து பாவாணர் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

பொத்தகம் என்ற சொல் பற்றியும் விரிவாக ஆய்வு செய்து பாவாணர் அவர்கள் கூறியுள்ளார். நான் பொத்தகம் என்ற சொல்லை கூறும் பொழுதும், பயன்படுத்தும் பொழுதும் தவறு என்று கூறியவர்கள் யாராவது இருந்தால் இந்த பொத்தகத்தை படித்து விட்டு மறுப்பு தெரிவிக்கலாம்.

பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொண்ட பெரு மகிழ்ச்சி.

நூலில் இருந்து 2 சொல் வரலாறுகள்:

1. வடமொழியில் தென்னைக்கு நாலிகேர என்று பெயர் அதினின்று கேரளம் என்னும் சொல்லைத் திரிக்கவுஞ் செய்வர். நாலிகேர என்பது வடமொழியில் தன்னந் தனிச்சொல். அதற்கு அம்மொழியில் மூலமில்லை. கேரளம் என்பது சேரலம் என்பதன் திரிபாயிருக்கவும். அத்திரிவைத் தலைகீழாகக் காட்டுவது வடமொழியாளர் வழக்கம்.

தென்னை இயற்கையாகத் தோன்றிய நிலம் குமரிநாடு. குமரிக் கண்டத் தென்பாக நாற்பத்தொன்பது நாடுகளுள் ஒரு பகுதி ஏழ்தெங்கநாடு. தென்னை தென்கோடியில் தோன்றியதனாலேயே, தென்றிசை அதனாற் பெயர் பெற்றது.

தென்னுதல் – கோணுதல், சாய்தல். இயல்பாகக் கோணுவதனாலேயே முடத்தெங்கு என்னும் அடைமுதற் சொல் எழுந்தது. தென்-தென்னை. தென்-தென்கு- தெங்கு. தென் = தெற்கு. தென்+கு – தெற்கு, ஒ.நோ: வடக்கு (வடம்+கு), கிழக்கு (கீழ்+கு), மேற்கு (மேல்+கு).

தென்னைக்கு நெய்தல் நிலம் மிக ஏற்றதாதலால், நெய்தல் மிக்க சேரநாட்டில் தென்னை தொன்று தொட்டுச் சிறப்பாகச் செழித்தோங்கி வளர்கின்றது. தீயர் (தீவார்) இலங்கையினின்று வந்தவரேனும், தென்னை குமரிநாட்டுத் தொடர்புடையது.

2.அரிசி அல்லது நெல்லளக்கும் படி முதன்முதல் மூங்கிற்குழாயாலேயே அமைந்தது. நுள்-நள்-நாள்-நாளம் = உட்டுளை, உட்டுளைப் பொருள்,

தண்டு. நாளம் -நாளி உட்டுளையுள்ள மூங்கில், புறக்காழது.

நாளி-நாழி = மூங்கிற்படி, படி.

இப்படியாக ஒவ்வொரு சொல்லுக்கும் பல பக்கங்கள் ஆய்வு செய்துள்ளது மிகவும் அருமை. தமிழ்த்துறையில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் வாங்கி படித்து பல சொற்களின் வரலாறை அறிந்து கொள்ளலாம். பாவாணர் அவர்களின் உழைப்பை ஒவ்வொரு சொல்லிலும் பார்க்க முடியும்.

வேர்ச்சொற் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்

பக்கங்கள்: 687. பதிப்பகம்: பூம்புகார்

– யாழினியன் (முகநூல் பதிவு)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுப்பு.!!

Admin

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

Leave a Comment