மகசூல் – பயணத் தொடர் – பகுதி 10

மகசூல்
SHARE

எதுவாகவும் இருக்கட்டும்:

 9ஆம் தேதி. இட்டார்சி ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் நல்ல மழைப்பொழிவு. போகும் வழியில் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். இங்கே ஜோஜு அண்ணன் சொன்ன படி நாடோடி பழங்குடிகள் (டேரா கம்யூனிட்டி) அதிகம் இருப்பதாக அறிந்து அதை பார்ப்பதற்காகத் தான் போய்க்கொண்டிருக்கிறேன் போகிற வழியில் சாப்பிட்டுவிட்டு போவேன். (ஆமா நல்ல பசி)

உள்ளே வந்ததும் முதல் பிளாட்பாரத்தின் இறுதி வரை நடந்தே வந்தேன். எல்லையில் திருநங்கைகளின் கூட்டத்தை பார்க்க முடிந்தது. அவர்கள் திருநங்கைகள் என்பதை ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போதே அறிந்தேன். ஆனால் என்னவோ ஒரு எண்ணம் வந்ததால் அதோடு நிறுத்திக் கொண்டேன். நெருங்கவில்லை. ஆனால் நடந்தது வேறு. 

சில இளைஞர்கள் அவர்களிடம் இருந்து தனியே நடந்து வந்தார்கள். காவலர்கள் அந்த இளைஞர்களை விசாரிப்பதும் அதன் பிறகு அவர்கள் (திருநங்கையர்கள்) செல்வதும் என்னால் பார்க்க முடிந்தது.

அதற்கு பிறகு நான் நின்று கொண்டிருந்த இடத்தில் எனக்கு இடது பக்கம் இருந்த தண்டவாளத்தில் இணைப்பு இடது பக்கம் இருந்து வலது பக்கம் மாறியது. என் வாழ்வில் முதல் முறையாக ரயில் தண்டவாள இணைப்பு மாறுவதை நேரில் காண்கிறேன். எனக்கு அருகில் அந்த வழியே வரப்போகும் ரயிலின் சக்கரங்களை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகவே சக்கரங்களை பார்ப்பதற்கு வசதியான இடத்தில் நின்று கொண்டேன். ஆனால் நான் பார்த்ததே வேறு.

அந்த ரயில் செல்லச் செல்ல இந்த திருநங்கைகளில் ஒருவர் பிளாட்பாரம் கடந்த அந்த ரயிலின் கரையோரம் நின்று கைகளைத் தட்டிக் கொண்டே இருந்தார்கள். சிறிது நேரத்தில் ஒருத்தியை காணவில்லை. எங்கு போயிருப்பார் என்று நினைத்தேன். நடந்திருந்தால் கண்ணில் பட்டிருக்க வேண்டும். ரயிலுக்கு அடியில் போயிருக்க மாட்டாள். ஓடும் ரயிலில் பிளாட்பாரத்தைக் கடந்து கற்களுக்கிடையிலிருந்து ஏறி விட்டாளா என்று குழப்பிக் கொண்டிருக்கும் போதே கைதட்டிக் கொண்டே இருந்த இன்னொருத்தியை ரயிலுக்குள் இருந்து யாரோ அழைத்தது போல இருந்தது. அவளும் ரயிலுக்கு ஈடு கொடுத்து ஏறிவிட்டாள். 

நேரம் செல்ல செல்ல ரயில் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மீதம் இருந்தவர்களும் அதே போல ஏறினார்கள். எதற்கு இத்தனை ஆபத்தான முயற்சி.  

எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் முறையான பயணச்சீட்டு ஏதும் இல்லாமல் பயணிப்பது முக்கிய காரணமாக இருக்கலாம். இரண்டாவது… அது எதுவாகும் இருந்துவிட்டுப் போகட்டும்

வந்த வேலை:

நான் வந்தவேலை இதுவல்ல. நாடோடிப் பழங்குடிகளைச் சந்திக்க வேண்டும். 

இட்டார்சியிலிருந்து போபால் – போபாலில் இருந்து இட்டார்சி செல்லக்கூடிய ரயில் எனக்கு இடது பக்கம் இருந்த பிளாட்பாரத்தில் வந்தது. அதன் மறு முனைக்கு போய்ப் பார்ப்போமே என்று நடக்கத் தொடங்கினேன். சென்ற வழியில் ரயில்வே காவலர்கள் சிலரை மடக்கி பிடித்து விசாரித்து கொண்டிருந்தார்கள். என்னை விசாரித்தால் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

இன்னொரு காவலரைப் பார்த்தபோது அவரிடம் போய் பேசலாம் என்று தோன்றியது. ஆனால் அவர் வேறு ஒருவரிடம் வேறொன்று பேசிக்கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில் குட்கா விற்பவரிடம் தனக்கு இரண்டு பாக்கெட்டுகளை அரசு அளித்த அதிகாரத்தை விலையாகக் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார். இடதுபக்க ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு நடந்து வந்தேன். 

ரயில்நிலையத்தின் மறுமுனை செழிப்பாக இருந்தது புது மழை பெய்து இருந்ததால் அனைத்து செடிகளும் சில்லென்று முளைத்திருந்தன கண்ணுக்கு குளிர்ச்சியான அந்த நேரம், நான் எதிர்பார்த்து வந்த ஒன்றே இல்லாமல் செய்திருந்தது.

இங்கு நாடோடி பழங்குடிகளை பார்க்கவே வந்தேன். ஆனால், முடியவில்லை. புதியதாக மழை பெய்து இருந்ததாலோ என்னவோ அவர்கள் உள்ளுக்குள் ரயில்வே நிலையத்துக்கு இருந்திருக்கிறார்கள். கடந்து செல்லும் ரயில்களிலும் என்னால் அவர்களை பார்க்க முடிந்தது குடும்பத்தோடு இருந்தார்கள் அவர்களது பாத்திர பண்டங்கள் அவர்களோடு இருந்தன

ஆனால் அவர்கள்தான் டேரா கம்யூனிட்டி என்று உறுதிப்பட என்னால் சொல்ல முடியவில்லை காரணம் இங்கு வந்ததிலிருந்து முக வேற்றுமையையும் உடல் தூய்மையும் வைத்து என்னால் பிரித்துச் சொல்ல முடிவதில்லை.

சரக்கு ரயில், பாசஞ்சர் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில் கூடவே பெட்ரோல் ரயில் என நான்கு ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு சுற்று சுற்றிக் காண்பித்து இருந்தது இந்த ரயில் நிலையம்

நிலையத்திலிருந்து கிளம்பிய ரயில்கள் பிளாட்பாரம் கடந்ததும் தான் சேர்த்து வைத்திருந்த மொத்த குப்பைகளையும் தள்ளி விட ஆரம்பித்ததை நன்கு கவனித்தேன். அது பேண்ட்ரி. அதாவது சமையல் பெட்டி.அதற்குள் இருந்துதான் எவ்வளவு குப்பைகள். 

பயோ டாய்லெட் என்றும் தூய்மைக்காக பல திட்டங்களை அமல்படுத்தியும் இருக்கும் ரயில்வே, பேன்ட்ரி பெட்டியின் கழிவுகளை மேலாண்மை செய்ய திட்டம் வகுத்தால் நன்றாக இருக்கும். வெறுமனே பயணிகளைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவது முறையா? 

அப்படி என்றால் இந்த தூய்மை திட்டங்கள் எல்லாம் மற்றவர்கள் பார்வைக்கு நாம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதா இல்லை என்றால் உண்மையாகவே பாரதத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதா? 

என் தரப்புக்கு யாருமற்று இந்த ரயில் நிலையத்தை அளந்து விட்டேன். என்னால் பார்க்க  முடிந்தது சில மட்டுமே.. ஏற்கனவே முழுதும் மழையில் நனைந்து காற்று வாக்கில் காய்ந்து சுற்றிக்கொண்டிருந்தேன். 

இப்போது ஜோஜு அண்ணனுக்கு அழைத்தேன். இட்டார்சி ரயில் நிலையத்தில் இருக்கிறேன் என்றும், வேறு யாரையாவது நான் தொடர்பு கொள்வது உதவுமா என்றும் கேட்டேன். 

சைல்ட் கேர் செண்டருக்கு போகச் சொன்னார். அங்கிருந்த ஜோதி அக்கா (பிறகு சொல்கிறேன்)விடம் ஜோஜு சார் கால் பண்ண சொன்னார் என்றார்.  அந்தநேரம் தான் அங்கு வந்தார் அவர். ஆம். இவர் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப் போகும் உலகம் கொஞ்சம் புதியதும், வலியதும் கூட. நாளை பார்ப்போம்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள். நாள் 15: “கொளுத்திப் போட்ட பிரியங்கா!”

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

“தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பரிசு மழை” – இன்று மெகா தடுப்பூசி முகாம்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

1 comment

அரவிந்தன் வே September 18, 2021 at 10:23 am

காத்திருக்கிறோம் அந்த உலகை பார்க்க….

Reply

Leave a Comment