பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

SHARE

’மரணம்… மாஸ் மரணம்…’ பாடலுடன் தொடங்கியது நாள். அங்கங்க பிச்சிப்போட்ட மாதிரி ஆடினார்கள் ஹவுஸ்மேட்ஸ்கள். பாத்ரூமில் பிரியங்கா அபிஷேக்கிடம் தன் அப்பா இறந்தது முன்பே தெரியவந்த கனவுகளை பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். 

இது போல இன்னும் நிறைய சம்பவங்கள் தனக்கு சமிக்ஞையாக தெரிய வந்ததைப் பற்றியும் அபிஷேக்கிடம் பகிர்ந்துக் கொண்டார் பிரியங்கா… ஆனா அவர் சொல்றத பாக்கும் போது எனக்கு ’ஏன்டா கனவாயிருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா..?’ என்பது போல் இருந்தது.

’நம்ம கதைய சொல்றதுனால எந்த யூஸும் இல்ல, ஜஸ்ட் ஏன் எதுக்குன்னு மட்டும் சொன்னா போதும்’ – என்று பெட்ரூமில் நிரூப் சொல்ல, அதற்கு பிரியங்கா ’உன்ன ஒரு பிரதிநிதியாத்தான் மக்களுக்கு தெரியும், அதனால இப்போ உனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சிருந்தா நல்லா இருக்கும்னு அவன் நினைக்கணும்… அப்படி சொல்லணும் நீ…’ என்று பதில் சொன்னார். 

அடுத்து ’கத சொல்லட்டுமா’ டாஸ்க்குக்கு வந்தவர் நிரூப்தான். சராசரியான இளைஞரின் வாழ்க்கை கதை. பத்தாவதில் குறைவான மார்க் எடுத்ததால் இன்ஜினியரிங் டிம்ப்ளோமோ  படித்து மாடலிங் உலகிற்கு தன் காதலி (இப்போ அவங்க முன்னால் காதலி) மூலம் அறிமுகமானதைக் கூறினார். ’ஒரு பெண்ணாலதான் எனக்கு ஒரு வாழ்க்கை கிடைச்சது இதுல எனக்கு அசிங்கம் எல்லாம் இல்லை பெருமைதான்’ என்றும் கூறினார். நிரூப்பிற்கு ஒரு லைக் மட்டும் தான் கிடைச்சது. 

அடுத்து ’கத சொல்லட்டுமா’ டாஸ்க்கிற்கு வந்தவர் அபினய். வாரிசு நடிகர்களின் கஷ்டங்கள்தான் அபினயின் கதை, இன்னும் புரியும் படி சொல்லாம் என்றால் வாழ்ந்து கெட்டவர்கள் என்றும் சொல்லலாம். சாவித்ரியின் பேரன் என்பதற்காகவே சினிமா வாய்ப்பு கிடைத்திடவில்லை என்றும், அந்த சினிமா வாய்ப்பிற்காக சந்தித்த போராட்டங்களையும் கூறினார். நான் யாருன்னு தெரியணுங்குறதுக்காக பிக் பாஸ் வந்திருக்கேன்னும் கூறினார். 

கதாசிரியர் ராஜூ அபினயின் கதை சொன்ன விதத்தையும் பாராட்டினார், ’நீங்க சொன்னதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நான் நல்ல பையனான்னு எனக்கு தெரியாது, ஆனா நான் நல்ல அப்பனா இருந்திருக்கேன்னு நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருந்தது’ என்றும் கூறினார். 

கிச்சன் டீமின் கேப்டனாக இருக்கும் ராஜூ, ஹவுஸ்மேட்ஸின் விருப்ப உணவுகளை கேட்டறிந்து கொடுத்தார். ப்ளேட்களை அழகாக அடுக்கி வைத்து உங்களுக்கு என்ன வேணும், உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டு கேட்டு செய்து கொடுத்தார். 

அடுத்து கதை சொல்லும் டாஸ்க்குக்கு வந்தவர் நாடியா சாங். பெற்ற அம்மாவால் அனுபவித்த கொடுமைகளையும், அதிலிருந்து தன்னை காப்பாற்றி கூட்டி வந்த கணவருக்காக நான் ஏதாவது செய்யணும் அதுக்குத்தான் நான் இங்க வந்திருக்கன்னு சொன்னது அழகாகவே இருந்தது. நாடியா சாங்க எல்லாருக்கும் தெரியும், ஆனா அதுல இருகுற சாங்ன்றவரை யாருக்கும் தெரியாது அதுக்காக தான் நான் இங்க வந்திருக்கன்னு சொன்னது ஹைலைட்டான விஷயம். ஏனோ நாடியாவுக்கு கிடைத்தது டிஸ்லைக்குகள் மட்டும் தான். ஒருவரும் லைக் கொடுக்கவில்லை. 

 இமான் அண்ணாச்சி மற்றும் பாவ்னி வெளியில் சோபாவில் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம், வருண் கதை எனக்கு சரியா கனெக்ட் ஆகலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க பாவ்னி.

தாமரையின் வாழ்க்கையை பற்றி அவரிடம் பேசி, சில விஷயங்களை கேட்டறிந்துக் கொள்கிறார் நம் கதாசிரியர். நாளை விஜயதசமிக்காக பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் தாமரையின் தலைமையில் நாடகம் போட சொல்கிறார். இதில் கதையை ராஜு எழுதுகிறார், எல்லா விஷயத்திலும் ராஜூ  தலைமைவகிப்பது எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என்றும் பிரியங்கா கூறினார் (இதுல ஏதோ உள்குத்து இருக்கே).

பாவ்னி இசையிடம், கிச்சன் வேலை எல்லாம் நான் பண்ணிக்கிட்டு இருக்க, விதவிதமா ஆம்லேட் போட்டுட்டு நானும் வேலை செய்யுறன்னு செய்யக்கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார். அபினயும் எல்லா வேலையும் நீயே செய்யனும்னு அவசியம் இல்ல, கூடவே பாவ்னியை ஏத்திவிடும் விதமாக நீ முதல்ல பேச ஆரம்பிக்கணும் என்று செல்லமாக அதட்டவும் செய்தார். 

இரவில் அனைவரும் நாடக ஒத்திகையை பார்த்துக்கொண்டிருந்தனர். ராஜூ தாமரையிடம் எப்படி பேசணும், என்னென்ன டயலாக் பேசலாம்னு நடித்துக்கொண்டிருந்தார். அப்போ ராஜூவை பார்க்க நல்ல கலைஞராக வெளிப்பட்டார். ஒரு நடிகனா இருந்தாலும், நாடகத்துறை கலைஞர்களை மதித்து நடந்து கொள்ளும் ராஜூவின் செயல் பாராட்டக்கூடியதாக இருந்தது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

மோடி ஆட்சிக்கு ஒரு கோடி கும்பிடு… வைரலாகும் புகைப்படங்கள்…

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

Leave a Comment