ஆண்களுக்கும் வலிக்கட்டும் – ‘சூர்ப்பனகை’ புத்தக அறிமுகம்

SHARE

வாசிப்பு ஒரு சுகானுபவம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது ஒரு கலவையான அனுபவம். பெரும்பாலும் வாசிக்கும்போது சில நேரங்களில் சில வார்த்தைகள் , சில வரிகள் அதிகபட்சம் சில கதைகள் மனதில் நிற்கும்..

ஆனால் சொற்பமான சில நேரங்களில் மட்டுமே வலி மனதில் நிற்கும்.. அந்த வகையில் இந்த சூர்ப்பனகை ஒரு சொல்லமுடியாத வலியின் தொகுதி அவ்வளவே.

கே. ஆர்.மீரா மலையாளத்தில் எழுதிய இத்தொகுப்பை கே.வி.ஷைலஜா தமிழுக்கு தந்துள்ளார்.. மூலத்தை அப்படியே படி எடுக்காமல் மொழி ஆக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

அம்பை, சேது பிருந்தா , தனா ஆகியோரின் பெண் எழுத்தில் பார்க்க முடிகிற அதே பார்வையைத்தான் கே.வி.ஷைலஜா வின் எழுத்திலும் வேறு விதமாக தரிசிக்க முடிகிறது.. ஆனாலும் கதைசொல்லியாக கே.வி.எஸ் ஜெயித்து விடுகிறார்.

சூர்ப்பனகை – நூல் அட்டைப்படம்

மற்றபடி, ஒரு ஆண் குழந்தை பெற முடியாதவன், அவனுக்கு பாலூட்டும் வலி தெரியாது, அவன் மாதந்தோறும் உதிரமுணராதவன் என இயற்கை வாய்ப்பளிக்காத இன்ன பிற இத்யாதி இத்யாதிகளை ஆணுக்கெதிராக அடுக்கும் இயல்பான நூலாகவே தெரிகிறது..

லெக்ட்டோஜேன்னும் ( ரெண்டு முறை வாசிச்சேன்) தனித்துவமான பூனையும் எல்லோரும் பார்த்த ஆனால் பதிவு செய்யத் தயங்குகிற ( கதைகள்) சம்பவங்கள்… மஞ்சள் காமம் ஒரு மாதிரியாக முடிந்த கதை என்றாலும் இப்போது வரையிலும் குழப்பிக்கொண்டே இருக்கிறேன்..இது பெண்ணியத்துக்குள் வருமா என்று?

தொகுப்பின் தலைப்பு எல்லாக்கதைகளுக்குள்ளும் ஒரு பெண் தரப்பு நியாயத்தையும் , நேரம் வரும்போது விலகும் ஆண் என்ற மனோபாவத்தையும் சுற்றியே நகருகிறது..

அப்படியென்றால், நூலுக்கு சூர்ப்பனகை என்ற இந்த பெயர் சரிதான்.

எழுத்தாளர் கே.வி.ஷைலஜா

பாலியல் குற்றங்களுக்காக பெண் தண்டிக்கப்படுகிறாள் என்றும், ஆண் எந்த நேரமும் தப்பித்து விடுகிறான் என்பதும் முழுமையற்ற வாதம் என்றாலும், அந்தந்த சம்பவங்கள் அதற்கு நியாயம் செய்யும் வகையில் அமைந்துள்ளன.. (கதைகளில் )

வெற்றுப்பேச்சின்போது பேசத்தொடங்கி, கடைசியில் இந்தா படி என இதைக் கையில் தந்த அன்பிற்கினிய தோழி கௌசல்யாவுக்கு ஆயிரம் நன்றிகள்..

எனக்கு கதைகள்/ நாவல் விரும்பி படிக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் இந்த நூல் முன்பே கேட்ட செய்திகளை வேறு வடிவில் சொல்லுவதால் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.

வம்சி புக்ஸ் வெளியீடு
விலை ரூ. 80.00


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

85 நாடுகளில் டெல்டா கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை!

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

Leave a Comment