மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

சீமான் மைக் சின்னம்
SHARE

நாம் தமிழர் கட்சி ஒரு பெரும்போராட்டத்துக்கு பிறகு மைக் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்களும் பார்வையாளர்களும் தங்கள் கருத்துகளை காற்றின்போக்கில் வீசத்தொடங்கியுள்ளனர். அதில் கவனிக்க வேண்டிய ஒன்று. தேர்தல் அறிவிப்பு வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு சின்னம் வந்திருப்பது எப்படிப் பார்த்தாலும் நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவைத் தான் தரும்” என்பது.

மேலும், தமிழ்நாட்டின் குறிப்பிடத் தகுந்த கட்சிகளுள் ஒன்றாக வேகமாக வளர்ந்து வரும் கட்சியான நாம் தமிழர் கட்சி இதுவரை வைத்திருந்த சின்னத்துக்கு புதிய சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் உற்சாகக் குறைவும் சுணக்கமும் வரலாம் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

ஆனால், தமிழ்நாட்டின் பாரம்பரிய திராவிட கட்சிகளான திமுக, அதிமுக அளவுக்கு சின்னத்தால் சரிவு நாம் தமிழருக்கு ஏற்படப்போவதில்லை.

அண்ணாவின் பிம்பம், எம்.ஜி.ஆரின் பிம்பம், ,கருணாநிதியின் பிம்பம், ஜெயலலிதாவின் பிம்பம் என முன்னாள் தலைவர்களின் பிரசார பலனை இன்னும் அறுவடை செய்து கொண்டிருந்தன திமுகவும் அதிமுகவும்.

இன்னும் அண்ணா நற்பணி மன்றங்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் வாக்கு வங்கி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் மானத்தை இரட்டை இலைக்கு ஒட்டுப்போட்டு காப்பாற்றுவேன் என்று இருக்கும் வாக்காளர்கள் உண்டு. நாளை திமுகவோ அதிமுகவோ வேறு சின்னத்தில் நின்றாலும் இரட்டை இலையை தேடும் மனநிலை அவர்களுடையது.நாம் தமிழர் கட்சியின் நிலையே வேறு. முழுக்க முழுக்க இளமையாலும் வேகமிக்க சமூகவலைதள பிணைப்புகளையும் கொண்டவர்கள் அவர்கள். ஒரு இரவுக்குள் தங்கள் சுற்றுவட்டத்துக்குள் கட்சிக்குள் கட்சித்தோழர்களுக்குள் மட்டுமல்லாது அவர்களின் நட்பு வட்டங்களுக்கும் கடத்திவிட முடியும்.

அப்படிப்பார்க்கின், நாம் தமிழர் கட்சிக்கு சின்னத்தை கொண்டு சேர்ப்பதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

சீமானின் பேச்சு மட்டுமன்றி வித்தியாசமான உத்திகள் மூலம் அதனைக் கொண்டு சேர்த்து விடுவர். தமிழர்களின் இடிதாங்கி -வலி தாங்கி அண்ணன் சீமானுக்கு கிடைத்திருப்பது ‘ஒலி வாங்கி’ (மைக்) என அடுக்கு மொழியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தவும் தொடங்கி விட்டனர்.

தங்களுக்கு மைக் சின்னம் கிடைத்திருப்பதை சீமான் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். அத்துடன் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார்.

பெட்டிச்செய்தி: அதாவது சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு என்கிற பாடலுடன் ரொம்பவே சப்தமாக அலறியது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரொம்பவே கோபமடைய ‘ரத்த கொதிப்பு’ பாடல் ரிங்டோன் நபர் அங்கிருந்து வேகமாகவே வெளியேறியும் விட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி விளக்கம்

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

Leave a Comment