மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

SHARE

மேற்குவங்கத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரைவில் நடந்த வேண்டுமென முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதனால் மேற்வங்கத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஏழு நாட்களுக்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார் முதல்வர்.

மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் 33 சதவீதமாக இருந்த போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது 3 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் இடைத்தேர்தலை நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியைத் தழுவினார். எனினும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவர், நவம்பர் 5ம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

சிறுவனைக் கொன்ற வழக்கில் குட்டியுடன் தாய் யானை கைது

Admin

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

சரியும் அதானி பங்குகள் வாய் திறக்காத பிரதமர்: நடப்பது என்ன?

Nagappan

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

Leave a Comment