சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

SHARE

சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான ‘இலக்கிய வீதி’ சார்பில் பதிப்புலகின் பேரொளிகள் என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் நிகழ்ச்சி குறித்து பகிர்ந்து கொண்ட செய்திகள் இவை.

நேற்றைய மாலைப் பொழுது இனிமையானது இலக்கிய வீதியின் நிகழ்வால்! நம்மில் பலர் உ.வே.சாவை அறிந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரும் , அவருக்கு இணையானவருமான சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களை அறிந்திருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்கு அன்றே ஆனந்த விகடன் அவரிடம் என் சரிதை என்ற காலத்தால் அழியாத கட்டுரை தொடரை வாங்கி பிரசுரித்து இன்றளவும் அது பல பதிப்புகளை கண்ட நூலாகும்.

சி.வை.தாமோதரம்பிள்ளை இல்லாவிடில் நமக்கு கலித் தொகை கிடைத்திருக்காது. நீதி நெறி நூலை வெளிக் கொண்டு வந்தவரும் இவர் தான். தொல்காப்பிய பொருள் அதிகாரத்தையும் கொண்டு வந்துள்ளார். இப்படி பல சங்க நூல்கள் தமிழுக்கு இவரது கொடைகள்.

இவரது பதிப்புல போராட்டங்களையும், வாழ்வையும் குறித்து முனைவர் ப.சரவணன் மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அவ்வளவு நுட்பமான பார்வையுடன், ஈடுபாட்டுடன் அவரது உரை இருந்தது! இந்த உரைக்கு மேலும் நேரம் தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஒரு இலக்கிய அமைப்பு ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் – அதை நிறுவியவரே மறைந்த பின்னும் தொடர முடிகிறதென்றால் – அது நானறிந்த வரை இலக்கிய வீதியாகத் தான் இருக்க முடியும். பெயருக்கேற்றார் போலவே இனியவனாகத் திகழ்ந்த பெரியவர் இனியவன் தமிழ் படைப்பாளுமைகளுடன் கொண்ட நெருக்கமும், பிணைப்பும் அலாதியானது.

அவருக்கு பிறகு அவரது மகள் வாசுகி பத்ரி நாராயணன் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அவர இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் அதன் துணை செயலாளர் துரை.லட்சுமிபதி நிகழ்வை சிறப்பாக நடத்தினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

தற்குறி – என்றால் என்ன?

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

Leave a Comment