RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

SHARE

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசி சுற்றறிக்கையை கண்டித்து கல்வியியலாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு, கோவையைச் சேர்ந்த கல்வியியலாளர் ஈஸ்வரன் எழுதிய கடிதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, :கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் தொடக்க வகுப்புகளுக்கு இந்த சேர்க்கை நடைபெறுகிறது. ஆரம்ப வகுப்பான LKG க்கு சேர்க்கை நடத்தப்படும்.

இந்த அறிவிப்பில் பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தனியார் பள்ளிகள் ஒரு மாணவனை கூட சேர்த்த வாய்ப்பில்லை. பல தனியார் பள்ளிகளில் இதற்கான மொத்த இடங்களையும் நிரப்ப இயலாது.

இந்த அறிவிப்பு பெரும்பாலான மாணவர்களை பாதிக்கிறது மாணவர்கள் அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர இயலாத நிலமை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசின் இந்த விதியை எதிர்த்து வால்பாறையைச் சார்ந்த லட்சுமணன் என்பவர் தனது மகன் பிரனேஷ் என்பவருக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் மாண்புமிகு நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் அளித்த தீர்ப்பின் படி ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் மாணவர்கள் எண்ணிக்கை பூர்த்தி ஆகவில்லை எனில் தொலைவை அதிகரித்து மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது

தற்போதைய தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வாபஸ் செய்ய வேண்டும்

1) ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளாக உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த தொலைவிற்குள் மாணவர்கள் எண்ணிக்கை பூர்த்தி ஆகவில்லை எனில் தொலைவு அதிகரித்து முழுமையான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

2) கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஏற்கனவே மாணவர்களை சேர்த்ததற்கு அரசு பணம் தராமல் இருப்பதால் பள்ளிகள் இந்த இட ஒதுக்கீட்டு பெற்ற மாணவர்களிடத்தில் கட்டணத்தை கட்டுமாறு வற்புறுத்தப்படுகின்றனர் இதனை கவனத்தில் எடுத்து தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிகளுக்கு இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.

3) கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடத்தில் பல்வேறு கட்டணங்களையும் தனியார் பள்ளிகள் வசூல் செய்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறை முழுமையாக கவனம் எடுத்து இந்த ஏழை மாணவர்களுக்கு துன்புறுத்தல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துகின்ற பொறுப்பு மாநில அரசாங்கத்திற்கு உண்டு
ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதை மாநில அரசு கண்டு கொள்வதில்லை. சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலையும் மாநில அரசின் இணையதளத்தில் சேர்த்து அந்தப் பள்ளிகளையும் இந்த சேர்க்கைக்கு உட்படுத்த வேண்டும்

நீதிமன்ற தீர்ப்பின்படி சேர்க்கை நடத்தப்படவில்லை எனில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

லட்சக்கணக்கான ஏழை பிஞ்சுகளுக்கு கல்வி அளிக்கின்ற இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாத தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

Leave a Comment