கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

SHARE

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த புதிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்

அதில் தொல்லியல் துறை மேம்பாடு குறித்த சில அறிவிப்புகள் வெளியிட்டார் அதன்படி

சிவகளை, கீழடி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

அகழாய்வில் கண்டறியப்பட்டவற்றைப் பாதுகாக்க, அந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.

கீழடியில் உலகத் தரத்திலான திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்

தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை அதைவிட கூடுதலாக 6 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – என்று பிடிஆர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இலக்கியங்களில் தமிழர்கள் பல வெளிநாடுகளோடு வர்த்தகம் செய்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதெல்லாம் உண்மைதான். என்பதை அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.

தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறை ஒரே நேரத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி வருகின்றது. ஆனால் இன்னும் நூற்றுக் கணக்கான இடங்கள் அகழாய்வுக்குக் காத்து இருக்கின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

சிவசங்கர் பாபா சிறை செல்வார்… அன்றே கணித்த யாகவா முனிவர்

Admin

கி.ரா. எனும் கதை கேட்பவர்!.

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

Leave a Comment