கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

SHARE

உண்மையான ஐரோப்பியத் தமிழறிஞரின் நினைவுநாள் பகிர்வோம்!.

தமிழ் என்பது தனி மொழி, அது சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அல்ல. தெலுங்கு, துளு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தன – என்று முதன் முதலில் சொன்ன அறிஞர் கால்டுவெல் அல்ல எல்லீஸ் அவர்கள்!.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் தமிழ்ப் பற்றின் காரணமாகத் தனது பெயரை தமிழ் இலக்கணப்படி எல்லீசன் என்று மாற்றிப் பயன்படுத்தினார்.

திருவள்ளுவருக்கு தங்கக் காசு வெளியிட்டார். திருக்குறளுக்கு மிக அதிக மேற்கோள் நூல்களுடன் உரை எழுதினார். பரிமேலழகரின் உரை ஆரியச் சார்பானது என்பதைத் தனது உரையில் சான்றுகளுடன் சுட்டிக் காட்டினார். தன் கல்வெட்டுகளில் கூட திருக்குறள் வரிகளை மேற்கோள் காட்டினார்.

தமிழ்த் தாகம் தணியாமல் பதிப்பிக்க, படிக்க தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்தார். அந்தப் பயணத்தில் ஒருநாள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டபோது அவருக்கு 42 வயது. அவர் கொல்லப்பட்ட பின்பு அவர் பல அறைகள் நிறைய சேகரித்த சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் அழிந்தன. தன் தத்துப் பிள்ளையை தமிழ்த்தாய் இழந்த அந்த நாள் மார்ச் 9, 1819.

தமிழ்மொழிக் குடும்பத்தை திராவிடமாக்கிய கால்டுவெல்லை அறிந்த தமிழர்களுக்கு இவரைத் தெரியாது, இவரது நினைவுநாள் தெரியாது. சென்னையில் உள்ள எல்லீஸ் சாலை இவர் நினைவாக பெயர் சூட்டப்பட்டது என்பதுகூடத் தெரியாது. அதுதான் திராவிடத்தின் சாதனை.

மானமும் அறமும் உள்ள தமிழர்கள் எல்லீசனை நினைவு கூர்வோம்.

– இரா.மன்னர் மன்னன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர், டிரைவருக்கு சம்மன்

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

Leave a Comment