திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

SHARE

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி, பி்ன்னர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார்.

இதனிடையே, தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, தனி கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.

அப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். சில மாதங்களிலேயே கட்சியை கலைத்துவிட்டு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை காலமானார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை..!!!

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

Leave a Comment