தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

SHARE

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது ஏன் என்பதை விளக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவருடைய ராஜினாமா தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோயல் நேற்று முதலே பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் மூவர் இடம் பெறவேண்டிய நிலையில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஏன் விலகினார் என்பது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் , பாஜகவின் அழுத்தம் காரணமாக அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது ஏன் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கிறது. அவருக்கு ஓய்வு காலம் என்பது 2027 இல்தான்.

3 தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது இருவர் மட்டுமே உள்ளார்கள். அருண் கோயலின் இந்த ராஜினாமாவால் தற்போது ஒரு தேர்தல் ஆணையர் இருக்கும் அமைப்பாக மாறிவிட்டது. என்னை பொருத்தமட்டில் அருண் கோயல் பாஜகவின் கிளை அலுவலகத்தை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடத்தி கொண்டு வந்தார். அவருடைய மனதிற்கே பிடிக்காத ஒரு விஷயம். என்ன இவர்கள் கேட்டார்கள். அந்த விஷயத்தை அருண் கோயல் விளக்கினால் நன்றாக இருக்கும். அருண் கோயல் விலகலால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் நம் இந்திய ஜனநாயகம் தோன்றிய காலம் முதல் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கிடையாது. தேர்தல் ஆணையம் பல காலங்களில் பாரபட்சமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது மத்தியில் எந்த ஆட்சியில் இருந்தாலும் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன்தான் நடந்து கொண்டது.

ஆனால் இந்த மாதிரி திடீர் ராஜினாமாவை நான் பார்க்கவில்லை. இந்த ராஜினாமாவின் பின்னணி என்ன என்பதை அருண் கோயல்தான் விளக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. ஆதார் கார்டு + வங்கி கணக்கு இருக்குல்ல? ஆதார் அட்டையில் எந்த மொபைல் நம்பர் இருக்கு? இப்படி பாருங்க ஏனென்றால் அவருக்கும் இந்திய ஜனநாயகத்தில் பங்கு இருக்கிறது என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரும் இந்த மத்திய அரசாங்கமும் விளக்க வேண்டும்.” இவ்வாறு ராதாகிருஷ்ணன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

Leave a Comment