ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

SHARE

ட்விட்டரில் அதிமுக நிர்வாகிகளாலும் ஆதரவாளர்களாலும் பரப்பட்டு வரும் தனியடைவான புறக்கணிப்போம்_புதியதலைமுறை கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாக, அர்சியல் உள்நோக்கங்களோடு வெளிவரும் எந்த ஒரு ட்விட்டர் பிரசாரத்தையும் மெய்யெழுத்து பொருட்படுத்துவது கிடையாது. ஆனால், இந்த முறை நடத்தப்படுவது வன்மமான பிரசாரம் என்பதால் இதுகுறித்த பொது விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டி இருக்கிறது.

முதலில் விவகாரம் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள், மாநிலங்கள் வாரியாக, சிறப்பு நிகழ்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று (26.02.2024) வெளியாயின. புதிய தலைமுறையின் ஆங்கிலப்பிரிவான ஃபெடரல் இணையதளத்துக்காக மற்றும் ஏபிடி (APT) நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு இது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த் கருத்து கணிப்பில், தமிழ்நாட்டில் கட்சி வாரியாக அவர்கள் பெறப்போகும் உத்தேச வாக்கு விகிதங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் திமுக38.33% பாஜக 18.48% மற்றும் அதிமுக 17.26% என்று குறிக்கப்ப்பட்டிருந்தது.

இதுதான் அதிமுகவை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. அதிமுகவை விட பாஜக அதிகமான வாக்குகள் வாங்கும் என்கிற கருத்து கணிப்பை விமர்சிப்பது என்பதைக் கடந்து நிறுவனம், நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட பலரையும் ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர்.

எந்த விதத்திலும் தேர்தல் கருத்து கணிப்புகளின் மீது நம்பிக்கையோ அல்லது பற்றோ எனக்கு இல்லை. அதே சமயம், தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல பாழ்பட்டு வரும் பொதுவெளி நாகரிகம் குறித்த அக்கறை எனக்கு உண்டு. பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற காலம் முதலே பொதுவெளி நாகரிகம் கேலிக்கூத்தாகவே இருக்கிறது. அண்ணாமலைக்கு முன்பும் இப்படியான தலைவர்க இருந்ததுண்டு. ஆனால், ஒரு கட்சியின் முதல்கட்ட தலைவராக இருக்கும் ஒருவர், தரம் தாழ்ந்த விமர்சனங்களை பொதுவெளியில் பேசுவது என்ற வழக்கத்தை பிரபலப்படுத்தியவர் அண்ணாமலை தான். இந்த வழக்கம் மேலும் மேலும் தொடர்வதையும் அவரது ‘வார் ரூம்கள்’ பின்பற்றி வருகின்றன.

இப்போது புதிய தலைமுறை விவகாரத்திலும் அதையே பின்பற்றுகின்றன அதிமுக ஐடி பிரிவுகள். கருத்துக் கணிப்புகளில் முரண் ஏற்படும் பட்சத்தில், கருத்துக் கணிப்பு செய்யப்பட்ட முறைமை, அதன் தொகுக்கப்பட்ட விதம், வெளியீட்டு முறைகள் உள்ளிட்டவற்றின் குறைகளை சுட்டிக்காட்டி, இது ஒரு உண்மையற்ற கருத்துக்கணிப்போ என்றோ உள்நோக்கம் கொண்ட கருத்துகணிப்பு என்றோ நிறுவ முயற்சிக்கலாம்.

ஆனால், நிறுவனத்தின் பிரதிநிதிகளையோ தலைவர்களையோ குறிவைத்து தனிமனித தாக்குதல் செய்வதென்பது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அவல அரசியலின் ஒரு பகுதி. இதில் அதிமுகவும் இத்தனை ஆர்வமாக பங்கெடுப்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது.

ஒரு புள்ளியில் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பார்த்தால், துளியும் ஆக்கமற்ற நடவடிக்கைதான் இது. ’எங்களைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டாயா, உன்னை அவமானப்படுத்துகிறேன் பார்’ என்ற நோக்கம்தான் இது. இந்த நொக்கத்தின் விளைவாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் அதை பரப்பும் நபர்களுக்குதான் பின்னடைவாக அமைபும்.

அதிமுக தன் வாக்கு வங்கி குறைந்ததாக யாரும் எண்ணக்கூட கூடாது என்று நினைத்தால், அதற்கு வெறுப்பு பிரசாரம் வழியல்ல.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?: ஆவேசமான உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் : முதல்வரை புகழ்ந்த நடிகர் சத்யராஜ்!

Admin

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

Leave a Comment