உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், அம்மாநில அமைச்சரான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல் தெரியவில்லை.
ஒரு அரசு சார்ந்த கூட்டத்தில்,பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முகக்கவசம் அணியாத நிலையில், காலில் முகக்கவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்த்தை இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்