அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

SHARE

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு அணில்கள் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் கூறியது விவாதப் பொருளானது.

மின்தடை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின்தடை ஏற்படுவதாக விளக்கம் கொடுத்தார்.

இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செந்தில் பாலாஜியின் கூற்றை கிண்டல் செய்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ ”அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும்.

செந்தில்பாலாஜி கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்துவிட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்றுகொண்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

Admin

நாங்க காந்தியா இருக்கணுமா ? சுபாஷ் சந்திரபோஸா இருக்கணுமா : பிரேமலதா ஆக்ரோஷம்!

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

Leave a Comment