தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

SHARE

தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி, திண்டுக்கல்‌, தஞ்சாவூர்‌ உள்ளிட்ட மாவட்டங்களில்‌ நடைபெற்ற கழக செயல்வீரர்கள்‌ கூட்டங்களில்‌ எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்‌ என தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டு தலைமைக்‌ கழகத்திற்கு அனுப்பி வைத்திருப்பது குறித்து அறிந்தேன்‌. என்‌ தொடர்‌ பணிகள்‌ மீதும்‌, முன்னெடுப்புகள்‌ மீதும்‌ நீங்கள்‌ வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்கும்‌, அன்பிற்கும்‌ நான்‌ என்றென்றும்‌ நன்றிக்குரியவனாக இருப்பேன்‌.

கழகம்‌ வழங்கிய வாய்ப்பில்‌, சேப்பாக்கம்‌- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத்‌ தொகுதி மக்களின்‌ தேவைகளைக்‌ கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள்‌ பணியையும்‌, கழகத்‌ தலைவர்மற்றும்‌ கழக முன்னோடிகளின்‌ வழிகாட்டுதலில்‌ கழக இளைஞர்‌ அணியின்‌ செயலாளராக தமிழகம்‌ முழுவதும்‌ பயணித்து, கழகப்‌ பணியையும்‌ என்னால்‌ இயன்றவரைச்‌ சிறப்பாக ஆற்றி வருகிறேன்‌.

கழகத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன்‌ பாசறைக் கூட்டங்கள்‌ நடத்துவது, நலத்திட்டடணிகளில்‌ ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத்‌ தயாராகி வருகிறேன்‌. இந்தச்‌ சூழலில்‌, என்மீதுள்ள அன்பின்‌ காரணமாக, “எனக்கு அமைச்சர்‌ பொறுப்பு அளிக்க தீர்மானம்‌ நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும்‌ தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள்‌ அனைவரையும்‌ அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‌.

எந்தச்‌ சூழலில்‌ எந்த முடிவை எடுக்க வேண்டும்‌ என்பதை கழகமும்‌ தலைமையும்‌ நன்கறியும்‌ என்பதை கழக உடன்பிறப்புகள்‌ நாம்‌ அனைவரும்‌ அறிவோம்‌. எனவே, பெரியார்‌, அண்ணா, கலைஞர்‌, பேராசிரியர்‌ அவர்களின்‌ வழியில்‌ வந்த நம்‌ கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌ வழங்கும்‌ கட்டளையின்‌ வழியில்‌ நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும்‌ தொடர்ந்து உழைத்திடுவோம்‌ என கூறியுள்ளார்.

talin


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிறந்த குழந்தை “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியது உண்மையா? – மருத்துவர்கள் விளக்கம்

Nagappan

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக அரசு எச்சரிக்கை

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

Leave a Comment