இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் குழு இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டு, முறையாக தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
மார்ச் 12 ஆம் தேதி அறிவிப்பு
மார்ச் 28 ஆம் தேதி மனுத்தாக்கல்
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று அப்பதிவுகள் தெரிவித்தன. சில இணைய ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் என்று முத்திரையிட்டு அச்செய்தி பகிரப்பட்டு இருந்தது.
ஆனால், உண்மை அதுவல்ல. பரவும் இந்தச் செய்தி, பொய்யானது என்று ஊடக தகவல் பிரிவு ட்வீட் வெளியிட்டுள்ளது.
எனவே வாசகர்கள் யாரும் இதுபோன்ற போலியான பதிவுகளை நம்ப வேண்டாம் என்று மெய்யெழுத்து சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தச் செய்தியை தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வை பரப்புங்கள்.