மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

SHARE

கடந்த 2011ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் சீட் கிடைத்த போது, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்ற அடையாளத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் தான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி கிடையாது, அவரது தூரத்து உறவினர் விஜயதரணி என்பது தெரியவந்தது. 1987ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் பயின்ற போதே மாணவர் காங்கிரஸில் இணைந்தவர் விஜயதரணி.

சட்டப்படிப்பு முடிந்ததும் முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனிஅவியும் பிரபல வழக்கறிஞருமான நளினியிடம் ஜூனியராக பணியாற்றி, பின்னர் உச்சநீதிமன்றத்தின் படு பிசியான வழக்கறிஞராகவும் மாறினார். இந்த காலகட்டத்தில் பெரிதாக கட்சி நிகழ்வுகளில் ஈடுபடவில்லை.

ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் குறையவில்லை.

விளைவு, 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் சீட் வாங்கி காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். இவரது கணவர் சிவக்குமார் கென்னடி குமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இதனால் விஜயதரணி என்ற தனது பெயரோடு விஜயதரணி கென்னடி என 2011 தேர்தலின் போது சுவர் விளம்பரங்கள் கொடுத்தார். கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள தொகுதியான விளவங்கோட்டில் இவரது வெற்றி எளிதானது.

எம்.பி. சீட் தான் வேண்டும்:
இதனிடையே 2019 மக்களவைத் தேர்தலின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சீட் எதிர்பார்த்து கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வசந்தகுமாருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இதையடுத்து வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி.சீட் வாங்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதும் அந்த முயற்சியில் தோல்வி மட்டுமே மிஞ்சியது. விஜய் வசந்துக்கு காங்கிரஸ் மேலிடம் எம்.பி.சீட் கொடுத்தது.

இதையடுத்து வேண்டாத வெறுப்பாக விளவங்கோடு தொகுதியில் 3வது முறையாக எம்.எல்.ஏ. சீட் வாங்கினார். வெற்றியும் பெற்றார். ஆனாலும் எம்.பி. சீட் கனவு விட்டபாடில்லை.

இந்த நிலையில், வரப்போகும் மக்களவைத் தேர்தலில் எம்.பி.சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு சாதகமான சூழல் அமையாததால் தற்போது பாஜகவுக்கு மாறியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

Leave a Comment