ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

SHARE

பிரபல செய்தி ஊடகங்களான பாலிமர் மற்றும் நியூஸ் 18 ஆகியவை டிராக்டர் உருவமும் 786786 என்ற எண்ணும் உள்ள பணத்தாளை பொதுமக்கள் வைத்திருந்தால், அவர்கள் ’காயின் பஜார் டாட் காம்’ என்ற இணைய தளத்திற்கு சென்று அதனை 30,000 ரூபாய்க்கு விற்கலாம் என்று செய்தி வெளியிட்டு உள்ளன. இது தவறான செய்தி ஆகும்.

காயின் பஜார் டாட் காம் என்பது உண்மையில் ஒரு இணைய விற்பனை தளம் மட்டுமே, அவர்கள் விற்பனையாளர்கள் அல்ல. அதாவது அவர்களின் இணைய தளத்தின் வழியாக பிறர் தங்கள் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை விற்க காயின் பஜார் டாட் காம் அனுமதிக்கிரதே தவிர, அவர்கள் நேரிடையாக விற்பது கிடையாது. இப்படி நடக்கும் விற்பனைக்கும் அவர்கள் நேரடி பொறுப்பாளிகள் கிடையாது.

காயின் பஜார் டாட் காம் – விற்பனைத் தளத்தில் உள்ள, ஓவியா கலெக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தங்களிடம் உள்ள 786786 என்ற எண் கொண்ட டிராக்டர் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் பணத்தாளை பிறர் ரூபாய் 30,000 கொடுத்து வாங்கலாம் என்றுதான் பதிவிட்டு இருந்தது. தாங்கள் வாங்கிக் கொள்வதாக அவர்கள் கூறவில்லை. அந்த விலைக்கு யாரும் வாங்காத காரணத்தால் இப்போது விலையை 30% குறைத்து ஓவியா கலெக்‌ஷன்ஸ் அறிவித்து உள்ளனர். இன்னும் பெரிய அளவில் விலை குறையக் கூடும்.

இதை செய்தி நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டதே பெரிய புரளி கிளம்பக் காரணமாக இருந்துள்ளது. 786786 எண் கொண்ட 5 ரூபாய் நோட்டுக்கு அவ்வளவு விலையும் இல்லை, யாரும் அவ்வளவு விலை கொடுப்பதாகக் கூறவும் இல்லை.

இது பற்றி விரிவாக அறிய கீழே உள்ள காணொலியைக் காணவும்.

https://www.youtube.com/watch?v=ChaA97ntXng&lc=UgyKEWLApW43RWnLG6V4AaABAg

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு.!!

Admin

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி !

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Leave a Comment