எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

SHARE

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்தை பதிவு செய்திருந்ததை எதிர்த்து தமிழக பாஜக இளைஞர் அணி நடிகர் சூர்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை எதிர்த்தும் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குரல் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில், ‘எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்.

தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்.’ என அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும்,கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தைஉளப்பூர்வமாக வரவேற்கிறேன்.

சூர்யாவின் இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிப்பதாக கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

Admin

தமிழர்கள் ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது: சீமான்

Nagappan

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

Admin

தேர்தல் தோல்விக்கு யார் காரணம்?முட்டி கொள்ளும்அதிமுக, பாஜக பிரமுகர்கள்!

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

நாங்க காந்தியா இருக்கணுமா ? சுபாஷ் சந்திரபோஸா இருக்கணுமா : பிரேமலதா ஆக்ரோஷம்!

Admin

பாஜகவுக்கு இதே வேலை தான்..கே.டி.ராகவன் விவகாரத்தில் போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி.

Admin

துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!

Admin

Leave a Comment