தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

SHARE

தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொறுப்பேற்கிறார்.

தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதனால், தமிழக மாநில பாஜக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வந்தது. தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பொறுப்பேற்கிறார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

பிரதமரின் மன் கி பாத் மூலம் ரூ.30.80 கோடி வருவாய்: மத்திய அரசு தகவல்

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர், டிரைவருக்கு சம்மன்

Admin

Leave a Comment