எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

SHARE

திமுகவின் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தேடப்பட்டு வருகிறார்.

சினிமா தயாரிப்பாளரான இவர் மங்கை என்ற திறைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இயக்குநர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா என்று சமுக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த பதிவுகளை பகிர்ந்தும் பரப்பியும் வருகின்றனர்.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் இதே செய்தியை பகிர்ந்திருந்தார்.

ஆனால், பரவும் படத்தை சற்று கவனித்தாலே உண்மை அதுவல்ல என்பது புலனாகிறது.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் படம் மங்கை. இதில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிக்கிறது ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ். இந்த படத்தின் தயாரிப்பாளர்தான் ஏ.ஆர். ஜாபர் சாதிக். இதில் கிருத்திகா உதயநிதியின் பெயர் எப்படி வந்தது? எங்கு நடந்தது தவறு?

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணியளவில் இந்த மங்கை படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டார். அதற்கான விளம்பரப் பதிவில் பாடலை வெளியிடுபவர் “இயக்குநர் கிருத்திகா உதயநிதி” என்று எழுதியிருந்தது. இதைத்தான் தவறாக புரிந்து கொண்டு மங்கை படத்தை இயக்குவதே கிருத்திகா உதயநிதிதான் என்று பரப்பி வருகின்றனர்.

முடிவு:

மங்கை திரைப்படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி. கிருத்திகா உதயநிதி அல்ல. சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

‘‘நீட் தேர்வு எனும் அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி

Admin

இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

Admin

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

Leave a Comment