மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

SHARE

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி,சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வெளியாகும் என நேற்று அறிவிப்பு வெளியானது. உடனே சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கின.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இதில் வேட்டி சட்டையில் ரஜினி தனது வழக்கமான மாஸ் லுக்கில் சிரிப்பது போல படம் இடம்பெற்றுள்ளது.

அவருக்குப் பின்னால் திருவிழாவில் ஏதோ பாடலில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்று உள்ளது. அநேகமாக ரஜினியின் அறிமுக பாடலில் இந்தக் காட்சி இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு.!!

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

“ஏழைகள் கூட வரி செலுத்தும் போது உங்களுக்கு என்ன?” – நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

என் வாழ்க்கையை படமா எடுத்த இவர்தான் நடிக்கணும் – தங்கமகன் நீரஜ் சோப்ரா

Admin

Leave a Comment