பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

SHARE

”வாத்தி கம்மிங்…” பாடலுடன் ஆரம்பமானது நாள். என்னதான் அடிச்சு பிடிச்சு சண்டைப்போட்டாலும், காலையில் டான்ஸ் ஆடும்போது மட்டும்தான் எல்லரும் தங்களையே  மறந்துடுறாங்க. 

’மதுமிதா எல்லாம் இப்படி பேசி விளையாடுமா?’ – என்று இருந்தது பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கை. மதுமிதா மற்றும் நிரூப், நள்ளிரவு நடந்த சேட்டையின் தொடர்ச்சியாக பாத்ரூமில் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர். 

நேற்றைய எபிசோடில் முக்கிய நபராக இருந்தது பிரியங்கா. பசி பசின்னு பாவம் பத்து நாள் சாப்பிடாத மாதிரி கேட்டுக்கொண்டிருந்தார். இதில் பசியை தூண்டி விடும் விதமாக ‘கமல் சார் பிறந்த நாளுக்கு யாருக்கு என்னென்ன வேணும், மெனு கொடுங்க’ என்று இமான் கேட்க, பிரியங்காவும் ’எனக்கு ஐஸ்கிரீம், பர்கர், கூல் டிரிங்ஸ் எல்லாம் வேணும்’னு ஆர்டர் பண்ண ஆரம்பித்தார். ஒரு நேரத்திற்கு அப்புறம் பாவம் பிரியங்காவால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை, இமானை அணைத்து அழ ஆரம்பித்து விட்டார் பிரியங்கா. இமான் ஆறுதல் கூறி படுக்கச் சொன்னார். 

’சரி, உனக்கு என்ன வேணும் சொல்லு நான் செஞ்சு தறேன்’ன்னு பாசத்தோடு ராஜூ  பெட்ரூமில் வந்து கேட்க, ’உருளைகிழங்கு ஆம்லேட் வேணும்’ என்று பிரியங்கா கூற, ’உருளைகிழங்கு எப்படி பெரிசா கட் பண்ணி போட வா’, என்று ராஜூ டவுட் கேட்க, ’இல்ல குட்டியா குட்டியா போடு’ன்னு பிரியங்கா கூற, ’அப்போ பொறுமையா குட்டிகுட்டியா கட் ப்ண்ணி போட்டு கொண்டு வறேன்’ன்னு சொல்ல… அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்பது போல் ஆனது பிரியங்காவின் நிலைமை. சரி என்று போனவனைப் படித்து, ’என்ன வர்ணிச்சு ஒரு பாட்டு பாடு, கதையா விடாத உண்மையா பாடு’ என்று பிரியங்கா கேட்க, ’உண்மையை சொல்லணும்னா உங்களை வர்ணிக்கவே முடியாது’ என்று டைமிங்கில் அடித்தார் ராஜூ. 

பசிக்கொடுமையில் இருந்த பிரியங்காவிடம், தாமரை விளையாட்டாக கத்திப் பேச, ’திட்டாத, பாசமா பேசு, என்ன கொஞ்சு’ என்று குழந்தைதனமா கேட்க ஆரம்பித்துவிட்டார் பிரியங்கா… அய்யோ பாவம். 

எப்படியோ ஒரு வழியாக சமைச்சு, ராஜூ சாப்பாட்டை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைக்க, பிரியங்காவின் கண்கள் விரியத் தொடங்கியது. அப்படியே பாசமா தாங்ஸ் சொல்லி பிரியங்காவும் ராஜூவும் கட்டிப்பிடிக்க, படால் என்று விழுந்தது சாப்பாட்டு பவுல்… என்னடா இது பிரியங்காவுக்கு வந்த சோதனை. பார்க்க சிரிப்பாக இருந்தாலும்… உனக்கு இதுலாம் தேவைதான் என்று வெறுப்பானாலும்… பிரியங்காவை பார்க்க பாவமாக தான் இருந்தது… ஆனால் என்ன செய்வது… விதி… அவனவனுக்கு என்ன கிடைக்குமோ அதான் கிடைக்கும். ஆடிய ஆட்டம் என்ன… பேசிய வார்த்தை என்ன… 

ராஜூவின் மிமிக்ரி திறமை மிகவும் பாராட்டக்கூடியது. பைக், கார் சவுண்ட் எல்லாம் பக்காவாக இருந்தது. இதை பார்க்கும் போது இவர் எவ்வளவு பயிற்சி செய்து இருப்பார்… எவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருப்பார்… முயற்சி செய்து இருப்பார் என்பதை உணர முடிகிறது. 

எம்.ஆர்.ராதா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் வாய்ஸும் நன்றாகவே இருந்தது. முக்கியமாக ரஜினி குரலில் பேசி, தாமரையை பார்த்து, தாமரை என்றால் எனக்கு பயம் என்று கூறியது அல்டிமேட்…

பிக் பாஸ் வீட்டில் மைக் மாட்டாதவர்கள், ஆங்கிலத்தில் பேசுபவர்கள், பகலில் தூங்குபவர்கள், ஓரிஜினலாக இருக்கிறேன் என்று வெட்டியாக இருப்பவர்கள் என்று ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு நபர்களை தேர்தெடுக்கும்மாறு அறிவித்தார். 

இதில் மைக் சரியாக மாட்டதவர்களில் பிரியங்கா மற்றும் அபிஷேக், பகலில் தூங்குபவர்களில் நிரூப் மற்றும் அபிஷேக், ஆங்கிலத்தில் பேசுபவர்களில் அபினய், வெட்டியாக இருப்பவர்களில் ஐக்கி மற்றும் சுருதி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அவரவர்களுக்கான போர்டுகள் தரப்பட, அதை அவரவர்கள் கழுத்தில் மாட்டி கொண்டு திரிய வேண்டும் என்றார் பிக் பாஸ். 

ப்ளாஸ்மா டிவியில் ஹரிஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர்  தோன்றி ஹவுஸ்மேட்ஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.  ’ஓ மணப்பெண்ணே’ படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்தனர். அந்த படத்தின் ட்ரெய்லரும் ஒளிபரப்பட்டது.  

ஹரிஷ் மற்றும் பவானி வீட்டில் இருப்பவருக்கு டாஸ்க் கொடுத்தனர். நிரூப் மற்றும் அக்ஷரா ஆம்லேட் செய்து இந்த வீட்டில் தனக்கு பிடித்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அக்ஷரா எப்படியும் ராஜூக்குதான் கொடுப்பார் என்று நன்றாகவே தெரியும், அப்படியே செய்தார்.  ஆனால் நிரூப் பிரியங்காவுக்கு கொடுப்பார் என்று பார்த்தால், அவர் ’அண்ணாச்சி எங்கே’? என்று தேட, கோபத்தின் உச்சத்திற்கு சென்றார் பிரியங்கா. ’பிடித்தவர்களுக்கு தானே கொடுக்க சொன்னாங்க அப்போ நீ எனக்குத்தானே கொடுக்கணும்’னு சண்டை போட்டார் பிரியங்கா. இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே என்பது போல் முழித்துக் கொண்டிருந்தார் நிரூப். அதில் கொஞ்சம் கோபமும் இருந்தது. 

பஞ்சதந்திரம் டாஸ்க்கில் கைப்பற்ற நாணயங்களின் பவர்களை ப்பற்றி பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விளக்கினார். இதன் மூலம், எவிக்ஷனில் இருக்கும் தன்னையோ தன் நண்பரையோ காப்பாற்றலாம் என்றும், தலைவராக இருப்பவரை தூக்கி தன்னையோ அல்லது தனக்கு பிடித்தவரையோ நியமிக்கலாம், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாணயம் வெத்திருப்பவருக்கு சிறப்பு சலுகையும் கொடுக்கப்படும் என்றும் இந்த நாணயத்தின் சலுகை பத்தாம் வாரம் வரை கிடைக்கும் என்றும் கூறினார். 

இதைவிட முக்கியம் எப்போதும் இந்த நாணயத்தை பத்திரமாக வைக்க வேண்டும் என்றும், இதை யாராவது திருடி விட்டால் அவர்களுக்கும் இந்த சலுகைகள்  வழங்கப்படும் என்றும் கூறினார். கடைசியில் வைத்தார் பாருங்க ஆப்பு…. அதான் பிக் பாஸ். இனி ஒருத்தணும் தூங்கப்போறது இல்லை மொமண்ட்…

பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் கார்டனில் நாணயத்தின் சலுகைகளை பற்றி பேசிக்கொண்டிருக்க, ’நான் வெளியில் போற மாதிரி இருந்தா அப்போ நீ காப்பாத்து’,  என்று பிரியங்கா, அபிஷேக் ஆரம்பிக்க, பேச்சுக்கள் அதிகமாகி அந்த உரையாடலில் இருந்து பாதியில் வெளியேறினார் நிரூப். 

வர வர பிரியங்கா மற்றும் அபிஷேக்கின் நடவடிக்கைகள் நிரூப்பிற்கு பிடிக்கவில்லை, அதை சொல்லவும் செய்துவிட்டார் இருந்தும் ’இவர்களின் பைத்தியகாரத்தனத்துக்கு என்னையே பலி கொடுத்து விடுவார்களோ’ என்று நிரூப் நினைப்பது போலத் தெரிகிறது…

-சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

“தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பரிசு மழை” – இன்று மெகா தடுப்பூசி முகாம்

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள். நாள் 26. ‘அணி பிரிஞ்சு அடிச்சுக்காட்டு…’

இரா.மன்னர் மன்னன்

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment