75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

SHARE

புதுடெல்லி

நமது நிருபர்

75ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்து அங்கு பேசினார்.

அப்போது அவர், நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடத்தப்படும் என்றும், இந்தக் கொண்டாட்டங்கள் மார்ச் 12ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கும் என்றும் அறிவித்தார்.

இந்தக் கொண்டாட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.. நல்ல வேளை நான் பிழைத்தேன்.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

Leave a Comment