முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

சிங்காரவேலர்
SHARE

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளதன்படி, கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மு.வரதராசனார், ப.சுப்பராயன், இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோருக்கு சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு சிங்காரவேலரை மறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து வாதங்கள் தொடங்கியுள்ளன.

இது குறித்து எழுத்தாளர் க.அரவிந்த்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

வங்க கவி இரவீந்திரநாத் தாகூருக்கு இராணி மேரிக் கல்லூரியில் சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தாகூருக்கு சிலை வைக்க மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் இன்றைய வெலிங்டன் சீமாட்டி உயர்கல்வி மையம் தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் வீடு.

பதிவைப் பார்க்க: https://www.facebook.com/photo.php?fbid=6520989327919003&set=a.659749054043089&type=3

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D6520991654585437%26id%3D100000240022424&show_text=true&width=500" width="500" height="618" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

அந்த இடத்தில் ம.சிங்காரவேலருக்கு சிலை வைக்கவும், அந்த வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டவும் மீனவ சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தாகூருக்கு சிலை என அரசு அறிவித்துள்ளது.

கோரிக்கை வைக்காமலேயே சிலை வைக்கப்படும் நாட்டில், அந்த மண்ணின் மைந்தனுக்கு, உண்மையான புரட்சியின் நாயகனுக்கு சிலை வைக்க அரசுக்கு மனமில்லாதது ஏனோ?

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

“வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வாசகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. சிங்கார வேலருக்கு சிலை வேண்டும், அவரது பங்களிப்பு மக்கள் மன்றத்தில் பேசப்பட வேண்டும்.”

இதனையொட்டி, கவனக்குறைவு என்றால் சரி செய்யப்பட வேண்டும் என்றும் கவனிக்கவே இல்லை என்றால் அரசு வருத்தம் உணர வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்..? வனதுறையினர் விளக்கம்

Admin

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

சிவசங்கர் பாபாவின் பள்ளியை மூட கோரி பரிந்துரை…!!

Admin

Leave a Comment