மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பட்ஜெட் குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் இந்த பட்ஜெட் மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட்தான் தமிழ்நாடு பட்ஜெட் என கூறினார்
மேலும் யானை பசிக்கு சோளப் பொரி போல தமிழக பட்ஜெட் உள்ளது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள். தெளிவான நிலை இல்லை என கூறிய ஜெயக்குமார் .
பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பதாகவும்2011-ல் கஜானாவை காலி செய்து விட்டுதான் திமுக ஆட்சி சென்றது.
இன்னும் கொஞ்ச நாட்களில் திமுக அரசு சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள் என கூறியுள்ளார்.