ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

SHARE

ஆண்களை அலறவிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்
இரா.மன்னர் மன்னன்

பகுதி 2 Link:

அரசர் நான்காம் வில்லியம்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறும் முன்பே இறந்துபோன நிலையில், 18ஆவது வயதில் மகாராணியாக முடிசூடிய விக்டோரியா பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இடம் மாறினார். பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் ஜார்ஜ் அரசரின் மனைவி சார்லெட் வசித்தபோது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

அதுபோல தனக்கும் எந்த பிரச்னைகளும் வராது என விக்டோரியா நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கைக்கும் மேலே பக்கிங்ஹாம் அரண்மனை அவருக்கு அள்ளிக் கொடுத்தது. பக்கிங்ஹாம் அரண்மனையில் கால் வைத்தது முதல் அடுத்த 63 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு அவர் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று ஆண்டார். 

உலக வரலாற்றில் ராணி விக்டோரியா ஆண்ட காலகட்டம் ‘விக்டோரியன் எரா’ என்றே அழைக்கப்படும் அளவுக்கு அவரது ஆட்சி உலகின் முக்கிய மையமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் ஐரோப்பாவின் மிகப் பெரும்பாலான நாடுகளின் அரண்மனைகளின் மராராணி விக்டோரியாவின் வாரிசுகள் பதவிகளில் இருந்தனர். இதனால் ‘ஐரோப்பாவின் பாட்டி’ என்றே விக்டோரியா அழைக்கப்பட்டார். 

அசுர வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் எல்லாம் விக்டோரியாவின் முன்பு கை கட்டி நின்றன. 1901ஆம் ஆண்டில் விக்டோரியா இறந்தபோது உலகில் மிகப் பெரிய அரசியல் வெற்றிடமே ஏற்பட்டது.

அந்த வெற்றிடத்தில் தோன்றிய ஆதிக்கப் போட்டியே உலகப் போர்களுக்கும் காரணமானது. இதையெல்லாம் இங்கு கூறக் காரணம் விக்டோரியாவின் வரலாற்றில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் ஒரு பெரிய பங்கு உள்ளது என்பதால்தான்.

வாழ்வில் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியை சந்திக்கும் போதும் விக்டோரியா பக்கிங்ஹாம் அரண்மனையை விரிவுபடுத்தினார். பல கட்டிடங்கள், பூங்கக்கள் உருவாக்கப்பட்டன.

அரசியின் வாரிசுகள் படிக்க என்றே அங்கு ஒரு மழலைகள் பள்ளிக்கூடம் கூட கட்டப்பட்டது. 800 ஊழியர்களுடன் ஒரு பிரமாண்ட தொழிற்சாலை போல பக்கிங்ஹாம் அரண்மனை மாறியது!.

ஆனால், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விக்டோரியா வந்த புதிதில் அவரை ஒரு இளைஞன் வந்து சந்திப்பதாக சர்ச்சை எழுந்தது. எட்வர்டு ஜோன்ஸ் என்ற அந்த இளைஞன் தூய்மைப் பணியாளர் போல அடிக்கடி அரண்மனைக்கு வந்து சென்றார்.

அரண்மனையில் உள்ளவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை என்பதால் அவர் ஒரு திருடர் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக மன்னிப்பும் விடுதலையும் பெற்றார்!.

ஒருமுறை சிக்கிய ர்ட்வர்டு ஜோன்சை சோதனை போடும்போது, அவரிடம் விடோரியாவின் ஆடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தி ஐரோப்பா முழுக்க பரவியது.  சர்ச்சை காரணமாக இங்கிலாந்து காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தினர்.

இப்படியாகவே அந்த சர்ச்சை ஓய்ந்தது. ஆனால் ஜோன்ஸ் 1893ல் குடி போதையில் பாலத்தின் மேலிருந்து விழுந்து இறக்கும் வரையில் அவரின் வாயைப் பிடுங்கிக் கொண்டே இருந்தார்கள், அவர் நம்பும்படியாக எதையும் கூறவே இல்லை.

அரண்மனைக்கு வந்த 4 ஆண்டுகளில் அரசி விக்டோரியாவுக்கு இளவரசர் ஆல்பர்ட் என்பவரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். 1861ல் இளவரசர் ஆல்பர்ட் இறந்துவிட்டார்.

இந்த தனிப்பட்ட சோகக் கதை மட்டுமே விக்டோரியாவின் ஒரே குறை. ஆனால் இந்தக் கதை பற்றி எழுதும் ஆங்கில எழுத்தாளர்கள் ஜோன்ஸ் பற்றி அறிந்த இளவரசர் ஆல்பர்ட்-டும் அந்த அரண்மனையில் மகிழ்ச்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்கின்றனர்!.

விக்டோரியாவுக்குப் பின்னர் தனது 60 வயதில் ஆட்சிக்கு வந்த ஏழாம் எட்வர்டு அரசர் அடுத்த 9 ஆண்டுகளில் இறந்து போனார். இவருக்குப் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் இங்கிலாந்தின் அரசராக 1910ல் முடி சூட்டப்பட்டார்.

இங்கிலாந்து வரலாற்றில் ஒரு அரசருக்கு மிகவும் நெருக்கடியான காலம் என்று ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் காலத்தைக் கூறலாம். முன்னர் விக்டோரியாவின் கட்டுப்பாட்டில் அடங்கி இருந்த பிற ஐரோப்பிய அரசர்கள், பின்னர் ஏழாம் எட்வர்டுக்கு மரியாதையாவது கொடுத்தனர். ஆனால் ஐந்தாம் ஜார்ஜ்ஜின் குரலுக்கு ஐரோப்பாவில் செல்வாக்கு இல்லை!.

இத்தனைக்கும் ஐந்தாம் ஜார்ஜின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் இரண்டாம் நிக்கலஸ் ரஷ்யாவின் பேரரசராகவும், இரண்டாம் வில்லியம் பிரஷ்யா மற்றும் ஜெர்மனியின் பேரரசராகவும் ஏற்கனவே முடிசூடி இருந்தனர். ஆனால் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.

1914ஆம் ஆண்டில் தொடங்கிய முதலாம் உலகப் போர் உலகத்தை உலுக்கியது போல அரசர்களையும் உலுக்கியது. முதலாம் உலகப் போரின் முடிவில், ரஷ்யாவில் இரண்டாம் நிக்கல்லஸ் தனது 5 பிள்ளைகளுடன் தூக்கிலடப்பட, ஜெர்மனியின் இரண்டாம் வில்லியம் நாட்டில் இருந்து வெளியேறி ஒரு அனாதை போல இறக்க நேர்ந்தது!.

அரச குடும்பங்கள் அதுவரை சந்திக்காத அவலங்கள் இவை. மேலும் இங்கிலாந்து அரச குடும்பமே ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்டது என்பதால், மக்களின் வெறுப்பில் இருந்து தப்பிக்க அவர்கள் தங்கள் குடும்பப் பெயரையே மாற்றி ‘விண்ட்சர்’ என்ற புதிய மரபைத் தோற்றுவித்தனர்!.

இதற்கு இடையில் 1915ஆம் ஆண்டின் பிரான்ஸ் பயணத்தின்போது ஐந்தாம் ஜார்ஜ் குதிரையின் மேலிருந்து கீழே விழ, அப்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவர் இறக்கும் வரையில் தொடர்ந்தது!.

அத்தோடு நுரையீரல் பாதிப்பும் ஐந்தாம் ஜார்ஜைப் படுத்தி எடுத்தது. ஒரு கட்டத்தில் ஐந்தாம் ஜார்ஜ் பெயருக்கு அரசராக இருக்க, அவரது மகன் எட்டாம் எட்வர்டுதான் பெரும்பாலான பணிகளைச் செய்து வந்தார்.

பக்கிங்ஹாம் அரண்மனை மருத்துவர்களுக்கே கூட அரசர் இங்கிருந்தால் பிழைக்க மாட்டார் என்று தோன்றியது. அவர்கள் கடற்காற்று மட்டுமே உங்களைக் குணப்படுத்தும் என்று சொல்லி கடற்பயணங்களை மேற்கொள்ள அரசரை வலியுறுத்தினர்.

அரசருக்கு அடிக்கடி கடற்பயணம் செல்வதில் விருப்பம் இல்லை. எனவே கடல் காற்று வீசும் கோட்டைகளில் தங்குமாறு சொல்லி 2 வேறு கோட்டைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 இதனால் அவர் குணமடையவில்லை என்றாலும் 1928லேயே இறப்பின் விளிம்புக்கு சென்ற அவரது ஆயுள் நீண்டது. இந்நிலையில் 1936ல் அவரது சகோதரி இளவரசி விக்டோரியா திடீரென இறக்க, அந்த மரணம் ஐந்தாம் ஜார்ஜை உலுக்கியது. 1936ல் படுக்கையிலேயே இறந்தார் அந்தப் பேரரசர். அவர் மரணத்திற்குப் பின்னே பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு புயல் காற்று வீசியது!.

தொடரும்…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

இரா.மன்னர் மன்னன்

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

Leave a Comment